இந்தியா

மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் ராஜினாமா

மகாராஷ்டிர மாநில முதல்வர் பிருத்விராஜ் சவாண், வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொண்டதையடுத்து, அக்கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்ததால் சவாண் பதவி விலகினார். “மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவை வெள்ளிக்கிழமை சந்தித்த பிருத்விராஜ் சவாண், தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்’ என்று உயரதிகாரி ஒருவர் கூறினார். இதையடுத்து, பிருத்விராஜ் சவாணையே இடைக்கால முதல்வராக நீடிக்கச் …

மேலும் படிக்க

மேக் இன் இந்தியா: இனி சிங்க முகம்!

இறக்குமதியை குறைத்துவிட்டு, இந்தியாவை உற்பத்தி சார்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வையுடன் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை இன்று நாட்டிற்கும் உலகிற்கும் அறிமுகம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த திட்டத்தை பிரபலப்படுத்தவும், அதுகுறித்த விவரங்களை மக்கள் தெரிந்துகொள்ளவும் http://www.makeinindia.com என்ற பிரத்யேக வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வெப்சைட்டில் மொத்தம் 25 துறைகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் சிங்க முகத்தை இனி பார்க்கலாம் என்கிற ரீதியில் ஒவ்வொறு …

மேலும் படிக்க

“மேக் இன் இந்தியா” திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். ‘மேக் இன் இந்தியா’ பிரச்சாரத்தின் துவக்க விழாவில், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை துவக்கி வைத்த வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் தொழில் தொடங்க உரிமங்கள் வழங்குவதை எளிதாக்குவதன் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அரசு …

மேலும் படிக்க

டெல்லி தேசிய பூங்காவில் இளைஞரை வெள்ளைப் புலி அடித்துக் கொன்றது

டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் தவறி புலியின் கூண்டில் விழுந்த இளைஞர் ஒருவரை வெள்ளை புலி அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து நேரில் கண்ட ஒருவர் கூறும்போது, “உயிரியல் பூங்காவில் சுற்றுலாவுக்காக வந்த இளைஞர் ஒருவர், 12.30 மணி அளவில் அங்கு உள்ள அரிய வகை வெள்ளைப் புலி இருக்கும் பகுதிக்கு தனது நண்பருடன் வந்திருந்தார். தடுப்புகளுக்குள் …

மேலும் படிக்க

திருப்பதியில் அஞ்சலகத்தில் ரயில்வே இ-டிக்கெட் சேவை தொடங்க முடிவு!

திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 5 அஞ்சலகங்களில், விரைவில் ரயில்வே இ-டிக்கெட்டுகள் சேவை தொடங்கப்பட உள்ளதாக, திருப்பதி அஞ்சலக அதிகாரி சர்மா தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, அஞ்சலகங்களில் அஞ்சல்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல், பல மக்கள் நலப்பணிகளும் தொடங்கி சிறந்த முறையில் இயங்கி வருகிறது. அதில், திருப்பதி தலைமை அஞ்சலகம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி, சந்திரகிரி, ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைகழக வளாகத்தில் உள்ள …

மேலும் படிக்க

டெல்லி திகார் ஜெயிலில் தொடரும் கைதிகளின் மர்ம மரணம்

கடந்த சில வாரங்களில் நடந்துள்ள மர்மமான இறப்புகளை அடுத்து திகார் சிறையில் பதற்றம் நிலவுகிறது. இதனை அடுத்து இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த சிறைத்துறை டி.ஜி.பி. முகேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். டெல்லி திகார் சிறையில் கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்த கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று வாரங்களில் திகார் சிறையில், 4-வது முறையாக மர்மமான முறையில் கைதி இறந்த சம்பவம நடந்துள்ளது. டெல்லியில் உள்ள திகார் …

மேலும் படிக்க

ஆபாசப் படம் பார்க்க வைத்ததாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் நித்யானந்தா

கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தாவின் சீடர் ஆர்த்தி ராவ் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். எனவே அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 8-ஆம் தேதி நித்யானந்தாவுக்கு பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சுமார் 6 மணி நேரம் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கு நித்யானந்தா சரியாக‌ ஒத்துழைக்கவில்லை. ஆதலால் ஆண்மை பரிசோதனை முழுமையாக நடத்தவில்லை. நீதிமன்றத்தை …

மேலும் படிக்க

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியட்நாம் பயணம்

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி 4 நாள் சுற்றுப் பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். இன்று அங்கு அவர் வியட்நாம் பிரதமர், துணைப் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஆளும் கம்யூஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகியோர்களை சந்திக்கிறார். எண்ணெய் துறையில் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது. மேலும் அவர் அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட உள்ளார்.

மேலும் படிக்க

டோல் கேட் மோசடி சுங்க வரியா..? பகல் கொள்ளையா..? – திரு(த்)ந்துமா அரசு

டோல் கேட் மோசடி  சுங்க வரியா..?  பகல் கொள்ளையா..? – திரு(த்)ந்துமா அரசு அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!! 20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில் அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோராய கணக்கு மட்டுமே, உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல் …

மேலும் படிக்க

ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது : சந்திரசேகரராவுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் எச்சரிக்கை

ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் செய்தியாளர்களிடம் கூறினார். தெலங்கானா குறித்து அவதூறு பரப்பும் ஊடக செய்தியாளர்களை 10 அடி ஆழத்தில் புதைத்து விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க