செய்திகள்

வட சென்னையில் மக்களின் ஊரட‌ங்கு நடைபெற்ற போது எடுக்கப்பட்ட காட்சிகள்

நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் குறித்து நாட்டின் சுகாதார நலன் கருதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி சுகாதாரத்தை கருத்தில் கொண்டு  பொதுமக்கள் இன்று ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை நாடுமுழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தனர். இதனைதொடர்ந்து இன்று வட சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே பேருந்துகள் இயங்கவில்லை வணிக வளாகங்கள், கடைகள், பேருந்து நிலையம், …

மேலும் படிக்க

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை யில் திமுக MLA ஆஸ்டின் தலைமையில் சாலை மறியல்!

மாநில நெடுஞ்சாலைகளில், குடிநீர் திட்டங்களுக்காக குழாய் பதிக்கிறோம் என்ற பெயரில் 2 ஆண்டுகளாக மரணக்குழிகளை ஏற்படுத்தி இன்று வரை சரிசெய்யாமல் பொதுமக்களை காவுவாங்கும் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளையில், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆஸ்டின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க

சென்னையில் மழை… இதுக்கே தள்ளாடுதே…☔

இன்று திடீரென சென்னையில் மழை பெய்தது. முக்கால் மணி நேரம்தான், “சற்று” கூடுதலாக பெய்த மழையால் நகர் முழுவதும் உள்ள சாலைகள் தத்தளித்தது.இதனால் நகரவாசிகள் மிரட்சியுடன் நடக்க வேண்டிய நிலை. சட்டசபை மற்றும் மாநகராட்சி அறிவிப்புகளில் மட்டும் சாலைகள் சீரமைக்கப்படுவதாக பத்திரிகைகள் தெரிவித்தாலும் இன்னும் நகர் முழுவதும் “நரக” சாலைகளாக தான் இருக்கிறது என்பதை சில மணி நேர அடை மழையில் நாமே கண் கூடாக கண்டோம். இதில் ஆட்சியாளர்கள், …

மேலும் படிக்க

கண்டெய்னர் லாரி விபத்து, வாலிபர் கால் முறிவு…

19-06-19 காலை 11 மணியளவில் இராயபுரம் கிழக்கு கல்மண்டபம் சாலையிலிருந்து, சூரியநாராயண செட்டி தெருவிற்கு திரும்ப வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, இந்த சந்திப்பில் மேல் நோக்கி செல்லும் சிக்னல் கம்பி மீது உரசியதில் அதனையொட்டி இருந்த சிக்னல் கம்பம் எதிர்பாராத விதமாக அறுந்து, அதனருகே நின்ற 40 வயதுடைய வாலிபர் மேல் விழுந்ததில் அவருடைய கால் முறிந்ததது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போக்குவரத்து போலீஸார் …

மேலும் படிக்க

சென்னையில் குடிநீர் பஞ்சம்? கோடையை எப்படி சமாளிக்க போகிறார்கள் மக்கள்? ஜீனியஸ் பார்வை

பருவ மழை சரியான அளவு பொழியாத காரணத்தினால் குடிநீர் பஞ்சம் மெதுவாக தமிழகம் முழுவதும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது இந்நிலையில் சென்னையை பொறுத்த வரை ஒரளவுக்கு வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீர்வரத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் மனம் தளராமல், குடிநீர்வாரிய உயர் அதிகாரிகள் ஆந்திரா சென்று பேசி பார்த்தும் பயனில்லாமல் வாடிய முகத்துடன் திரும்பி வந்தனர். இருந்தாலும் சமாளிப்போம் என புரூடா விட்டு, மே மாதம் …

மேலும் படிக்க

தனுஷ்கோடி: பேரழிவின் நினைவு நாள்!

கடல் சீற்றத்தால் 54 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது, டிசம்பர் 23-க்கும் 24-க்கும் இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சீற்றத்தில் ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி நகரமே அழிந்தது. அந்தப் பேரழிவின் நினைவு நாள் இது. அந்த சிதைவுகளின் மிச்சம் மட்டுமே! அந்த கண்ணீர் நினைவுகளின் சாட்சியாக இன்றும் உள்ளன. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் தனுஷ்கோடியையும் பார்க்க வருகின்றனர். அவர்களுக்கு அந்த சோக வரலாற்றின் செய்தியை இந்த சிதிலங்களே! …

மேலும் படிக்க

தெற்கு ரெயில்வேயில் பகல் கொள்ளை…

உங்கள் பார்வைக்கு… இன்று காலை குடும்பத்துடன் திருவள்ளூரிலிருந்து சென்னை திரும்ப ரயில் நிலையத்துக்கு வந்து பயணச்சீட்டு வாங்கும் போது காலை 9-58மணி. ரயில் புறப்படும் நேரம் காலை 10 மணி. நாம் சீட்டினை பெற்றுக் கொண்டு செல்வதற்குள் ரயில் புறப்பட்டு விட அடுத்த ரயிலுக்கு காத்திருந்த போது அடுத்த ரயில் அரக்கோணத்திலிருந்து வருகின்ற போதே மக்கள் நெருக்கத்தில் நிரம்பி வழிந்ததால் அடுத்த ரயிலில் செல்ல முடிவு செய்தோம். கிட்டத்தட்ட 11-15 …

மேலும் படிக்க

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அதிர்ச்சி!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தி பலியான 2 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது பிரபல ஆங்கில ஊடகமான என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பொது மக்கள் வன்முறையில் …

மேலும் படிக்க

தமிழகத்தில் இதிலுமா மோசடி ?

  உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் தமிழகம்தான் முன்னோடி என்ற பெருமை நமக்கு உண்டு. அந்த பெருமைக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மோசடி தலைதூக்கியுள்ளது. அதுவும் குறிப்பாக இதய மாற்று அறுவை சிகிச்சையில் வெளிநாட்டு நோயாளிகள் அதிக அளவில் பயனடையும் வகையில் மோசடி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சக அதிகாரிகள் இந்த மோசடியைக் கண்டுபிடித்துள்ளனர். உறுப்பு மாற்று அறுவை …

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்

இன்று(நவம்பர், 16) தேசிய செய்தியாளர்கள் தினம். செய்தியாளர்கள் அனைவருக்கும் துணிவு மற்றும் நேர்மையுடன் பணியாற்றி நாட்டின் நான்காம் துணின் கடமையை செவ்வனே செய்திட ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், ஆசிரியர், பி. வெங்கடேசன் இணை ஆசிரியர், லி. பரமேஸ்வரன் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி.  

மேலும் படிக்க