செய்திகள்

முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சிவிகிதம் குறைந்திருக்கிறது

முஸ்லிம் மக்கள்தொகை அதிகரித்து வருவதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சிவிகிதம் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு குறைந்திருப்பதை சுட்டிக்காட்டும் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தி இந்து நாளேடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த சில தசம ஆண்டுகளில் இந்து மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இந்திய முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இதனை புதிய சென்சஸ் …

மேலும் படிக்க

பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்

மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார். நாமினி! “முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். …

மேலும் படிக்க

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

உடல் ஆரோக்கியத்தை கண்டறிய முழு உடல் பரிசோதனை முன்னோடி திட்டமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில், ‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்’ தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, சுகாதாரத் துறையில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்தபோது, “நோய் இருப்பது உரிய நேரத்தில் அறியப்பட்டால் தக்க சிகிச்சை பெற்று பூரண குணம் …

மேலும் படிக்க

இந்திய மக்கள் தொகையில் 79.8% இந்துக்கள்; 14.2% முஸ்லிம்கள்

இந்திய மக்கள் தொகை ஆணையம் வெளியிட்டுள்ள இந்த தகவலின்படி, இந்தியாவில் அதிகபட்சமாக இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 24.6 சதவீதமும் இந்துக்களின் மக்கள்தொகை 16.8 சதவீதமும் வளர்ச்சிகண்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்களின் படி இந்திய மக்கள் தொகையில் 79.8 சதவீதம் பேர் இந்துக்கள். 14.2 சதவீதம் பேர் முஸ்லிம்களாவர். இருந்தபோதும் இந்துக்களின் மக்கள்தொகை முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 0.7 சகவிகிதம் குறைந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை …

மேலும் படிக்க

இந்தியாவின் மக்கள் தொகை 121.09 கோடி

இந்தியாவின் மக்கள் தொகை 121.09 கோடி ஆகும். இதில் இந்துக்கள் 96.63 கோடி( 79.8 %), முஸ்லீம்கள் 17.22 கோடி ( 14.2 %), கிறித்தவர்கள் 2.3 கோடி (2.78 %), சீக்கியர்கள் 2.08 கோடி, ஜென மதத்தினர் – 45 லட்சம், பவுத்தவர்கள் – 84 லட்சம் ஆகும். இந்த புள்ளி விபரங்களை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

மேலும் படிக்க

சுகாதாரத் துறை சார்பாக 22 நலத்திட்டங்கள், முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக சுகாதாரத் துறை சார்பாக 22 நலத்திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கையில், “விசையுறும் பயதினைப் போல் – உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்” என்று சொன்னதைச் செய்யும் உடல் வேண்டி உருகுகிறார் மகாகவி பாரதியார். நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால் தான் அறிவுச் செல்வம் உட்பட அனைத்துச் செல்வங்களையும் …

மேலும் படிக்க

இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை தொடர வேண்டாம்: ஜெயலலிதா

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர வேண்டாம் என அதிமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், நாலாந்தர அரசியல்வாதிகளே பேசக் கூச்சப்படும் வார்த்தைகளை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதை கண்டித்தும், இதற்காக அவர் மன்னிப்புக் கேட்கக் கோரியும், அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக மீனவர் பிரச்சனையில் பிரதமர் மோடிக்கு தாம் எழுதிய …

மேலும் படிக்க

​இன்று சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடெங்கிலும் ஒன்பதரை லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதுகின்றனர். 71 நகரங்களில் உள்ள, 2,000 தேர்வு மையங்களில் சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு நடைபெறுகிறது. கடந்த 2011ல், சிவில் சர்வீஸ் தேர்வில், ‘சிசாட்’ என்ற திறனறி தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இது, ஆங்கில வழி மாணவர்களுக்கு எளிதாகவும் மற்ற மொழி மாணவர்களுக்கு …

மேலும் படிக்க

சிவகங்கை அருகே தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு

சிவகங்கை அருகே மிக தொன்மையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சங்க காலத்தில் ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்துவந்த நகரம் என மத்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கீழடி கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் அகழாய்வானது கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இங்கு சுமார் 3 இடங்களில் ஒவ்வொரு இஞ்ச் அளவிலும் ஆய்வு மேற்கொண்டதில் முதலாம் …

மேலும் படிக்க

நம்ம சென்னைக்கு இன்று 376 வது பிறந்த நாள்!

எழில்மிகு நகரமான நமது சென்னை மாநகரம் தனது 376-ஆவது பிறந்த நாளை சனிக்கிழமை கொண்டாடுகிறது. சுமார் 75 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள அமைதிப் பூங்காவான சென்னை நகரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு மாநிலத்தவரும் வசித்து வருகின்றனர்.  1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி சென்னை நகரம் உருவாக்கப்பட்டது. அப்போது கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா …

மேலும் படிக்க