முக்கியசெய்திகள்

டெல்லி சட்டப் பேரவையை கலைக்க பரிந்துரை!

டெல்லியில் மறுதேர்தல் நடத்த பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, டெல்லி சட்டப் பேரவையை கலைக்க பரிந்துரைத்து குடியரசுத் தலைவருக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிக்கை அனுப்பினார். டெல்லியில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வரான ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால், 49 நாள் ஆட்சிக்குப் பிறகு, லோக்பால் மசோதாவை அமல்படுத்த முடியவில்லை எனக் கூறி ராஜினாமா செய்தார். அதன்பிறகு, அங்கு குடியரசுத் …

மேலும் படிக்க

சகாயம் ஆணையத்துக்கு தாமதம் ஏன்? கருணாநிதி கேள்வி

நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கூட சகாயம் ஆணையத்துக்கு அனுமதி அளிக்க தாமதம் செய்யப்பட்டது ஏன்? என தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரானைட் முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு தான்” என்று தலைப்பிட்டிருக்கின்றன. உண்மை தான்; முறைகேடு நடக்கும் போது தானே, வெளிச்சத்துக்கு வர முடியும்? அந்த …

மேலும் படிக்க

காங்கிரஸில் இருந்து ஜி.கே. வாசன் நீக்கம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசனை நீக்கி அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தத் தகவலை டில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசியபோது அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் குமார் உறுதிப்படுத்தினார். அவர் மேலும் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் புதிய கட்சியை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சென்னையில் செய்தியாளர்களுக்கு ஜி.கே. வாசன் திங்கள்கிழமை பேட்டியளித்துள்ளார். அப்போது …

மேலும் படிக்க

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக அசோக்குமார் நியமனம்

தமிழகக் காவல் துறையின் சட்டம், ஒழுங்கு தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) அசோக் குமாரை நியமனம் செய்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. பதவி நீட்டிப்பில் டி.ஜி.பி.யாக இருந்து செவ்வாய்க்கிழமையுடன் பணி நிறைவடையும்  கே.ராமானுஜத்தை மாநில அரசின் ஆலோசகராக நியமித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விவரம்: தமிழகக் காவல் துறையின் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 3 ஆண்டுகளாக இருந்த கே.ராமானுஜம் செவ்வாய்க்கிழமை(நவ.4) ஓய்வு பெறுகிறார். இதையொட்டி, அந்தப் பணியிடத்துக்கு …

மேலும் படிக்க

தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்பு

மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்றார். பாஜக தலைமையிலான முதல் அரசு அமைந்த இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அத்வானி மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்துகொண்டனர். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 122 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக சார்பில் தென்மேற்கு நாக்பூர் தொகுதியில் களம் இறங்கி வெற்றி பெற்ற தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிர …

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் தூக்குத் தண்டனை விவகாரம்: ராமநாதபுரம் எம்.எல்.ஏ இலங்கை செல்கிறார்

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்குத்தண்டனையை மேல்முறையீடு செய்வதற்காக ராமநாதபுரம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா இலங்கை செல்வதாக அறிவித்துள்ளார். ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் தங்கச்சிமடம் சமுதாயக்கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மீனவப் பிரநிதிகள் சேசு, பேட்ரிக், சந்தியா, ராயப்பன், அருள், ஜெயசீலன் உள்ளிட்டோர்முன்னிலை வகித்தனர். இதில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பேசியதாவது, ”பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று ஐந்து மாதங்களில் மட்டும் …

மேலும் படிக்க

ஹைதராபாத் மருத்துவர்கள் கருவில் இருந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்து சாதனை

கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்பட்ட இதய பாதிப்பினை சரி செய்ய அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஹைதராபாத் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சிரிஷா என்ற பெண்ணின் கருவில் இருந்த குழந்தை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. கருவில் இருந்த குழந்தைக்கு இதய பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்த மருத்துவர்கள், அந்த குழந்தை பிறந்த பிறகு அதற்கு சிகிச்சை அளிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டனர். எனவே, கருவில் இருக்கும் போதே குழந்தைக்கு அறுவை …

மேலும் படிக்க

ஐந்து தமிழ் மீனவர்களுக்கு மரண தண்டனையா? கருணாநிதி கண்டன அறிக்கை

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருப்பதைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி தாக்கிக் கைது செய்வதும், சிறையிலே அடைப்பதும், வதைப்பதும் தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், 2011ஆம் ஆண்டு நவம்பரில் தமிழக மீனவர்கள் ஐந்து பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படையினர், அவர்கள் போதைப் பொருள் கடத்தி வந்ததாக …

மேலும் படிக்க

கலைஞர் டிவிக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் : குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

கலைஞர் டிவிக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு டில்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அமிர்தம் உட்பட 19 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது. கலைஞர் டிவி உட்பட 9 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய …

மேலும் படிக்க

5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை

தமிழ்நாட்டு மீனவர்கள் 5 பேருக்கு இலங்கையில் தூக்கு  தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஹெராயின் கடத்தியதாக 2011-ல் வழக்கு தொடரப்பட்டது. கடத்தல் வழக்கில் தமிழக மீனவர்கள் 5 பேர், இலங்கை மீனவர்கள் 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மீனவர்கள் 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கொழும்பு நகர நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ராமேஸ்வரத்தில் இருந்து 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ந் தேதி காலை 712 விசைப்படகுகளில் …

மேலும் படிக்க