முக்கியசெய்திகள்

பீஹார் தசரா விழாவில் ஜன நெரிசலில் சிக்கி குறைந்தது 32 பேர் பலி

இறந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என பீஹாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்து பண்டிகையான தசரா தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்து பெரிய விழா ஒன்றில் கலந்து கொள்ள பொதுமக்கள் திரண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. பாட்னாவின் காந்தி மைதானத்தில் நேற்று தசரா விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு 32 பேர் உயிரி ழந்தனர். பலர் …

மேலும் படிக்க

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நவராத்திரி வாழ்த்து

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள நவராத்திரி வாழ்த்துச் செய்தியில், வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாயும், செல்வத்தைத் தரும் திருமகளாயும், துணிவைத் தரும் மலைமகளாயும் விளங்கும் அன்னையை, பெண்மையை போற்றி வணங்கும் விழா நவராத்திரி திருவிழா. மக்களின் துன்பம் நீக்க எண்ணிய அன்னை ஒன்பது நாட்கள் மகிஷாசுரன் என்ற அரக்கனுடன் போரிட்டு அவனை வதம் செய்த நாள் விஜயதசமி திருநாள். ஒன்பது நாட்கள் அன்னை சக்தியை வழிபடுவதால் ‘நவராத்திரி’ …

மேலும் படிக்க

அடுத்தது “அம்மா ஜெயிலா” டிவிட்டரில் சுப்ரமணிய சுவாமி

டிவிட்டரில், தமிழக அரசின் அம்மா பெயரில் உள்ள  திட்டங்களை கிண்டலடித்துள்ளார் சுப்ரமணிய சுவாமி இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், அம்மா கேன்டீன், அம்மா சிமென்ட், அடுத்து அம்மா ஜெயிலா? என்று கேட்டுள்ளார். After Amma Canteen Amma Cement will there be Amma Jail? — Subramanian Swamy (@Swamy39) September 29, 2014

மேலும் படிக்க

நடிகர் விஜய், இவருக்கு இது சோதனை காலம்

நடிகர் விஜய்க்கு இது சோதனை காலம் போல, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பைத் கேட்டு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடிய ரசிகர்களால் நடிகர் விஜய் கவலையடந்துள்ள நிலையில் விஜய்யின் படத்தைப் போட்டு மேலும் ஒரு பரபரப்புப் போஸ்டரை ஒட்டி அவரை மேலும் சோதனைக்குள்ளாக்கியுள்ளனர். அந்தப் போஸ்டரில், நன்றி… நன்றி…நன்றி… தமிழகத்தில் இருந்து எங்களுக்கு விடுதலை வாங்கித் தந்த பிரதமர் மோடி அவர்களுக்கும், நீதிபதி குன்ஹா அவர்களுக்கும் எங்கள் இயக்கத்தின் …

மேலும் படிக்க

வெண்கலப் பதக்கத்தை கழுத்தில் அணிய மறுத்த இந்திய வீராங்கனை சரிதா

தென்கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச் சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சரிதா தேவி, அதனை கழுத்தில் அணிந்து கொள்ள மறுத்துவிட்டார். மகளிர் குத்துச்சண்டை 60 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் இந்திய வீராங்கனை சரிதா தேவி, தென் கொரியாவின் ஜினா பார்க்குடன் நேற்று மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், ஆக்ரோஷமாக செயல்பட்ட சரிதா தேவி தனது அதிரடி …

மேலும் படிக்க

பக்ரீத் விடுமுறை அக்டோபர் 6ம் தேதி: அரசாணையில் தகவல்

பக்ரீத் பண்டிகை அக்டோபர் 5ம் தேதிக்கு பதிலாக 6ம் தேதியன்று கொண்டாடப்படுவதால், அன்றைய தினத்துக்கு அரசு பொது விடுமுறையை மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பக்ரீத் பண்டிகை அக்டோபர் 5ம் தேதிக்கு பதிலாக 6ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படும் என்றும், எனவே, தமிழக அரசு அன்றைய தினம் விடுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமை காஜி விடுத்த வேண்டுகோளை ஏற்று, பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை …

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டுப் போட்டி : தங்கம் வென்றார் மேரி கோம்

ஆசிய விளையாட்டு மகளிருக்கான குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கம் வென்றார். 51 கிலோ எடைப்பிரிவில் மேரிகோம் தங்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் மேரி கோம் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். 5 முறை உலக சாம்பியனான மேரி கோம், கஜகஸ்தான் வீராங்கனை ஜாய்னா ஷெகெர்பெகோவா என்பவரை 2-0 என்று வெற்றி பெற்றார்.

மேலும் படிக்க

அமெரிக்க வெள்ளை மாளிகையில் மோடி எழுதிவைத்த வாழ்த்துக் குறிப்பு

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி எழுதி வைத்த வாழ்த்துக் குறிப்பு. இதில், வெள்ளை மாளிகையில் தாம் சந்தித்த மகிழ்ச்சியான தருணங்களையும், இரு நாட்டு உறவுகளுக்கான கட்டாயத்தையும் குறிப்பிட்டும், மக்களை இணைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி எழுதியுள்ளார்.

மேலும் படிக்க

ஜெயலலிதா மீதான தண்டனை ரத்து, ஜாமீன் வழக்கு விசாரணை அக்.7-க்கு ஒத்திவைப்பு: கர்நாடக உயர் நீதிமன்றம்

தண்டனை ரத்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு அக்டோபர் 6-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் புதிய மனுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், ஜெயலலிதா உடனடியாக ஜாமீனில் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தசரா விடுமுறை முடிந்து வழக்கமான அமர்வு ஜாமீன் மனுவை …

மேலும் படிக்க

ஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்: ஜாமீன் மனு மீது நாளை மீண்டும் விசாரணை

ஜெயலலிதா உட்பட நால்வரின் ஜாமீன் மனு மீது நாளையே (புதன்கிழமை) விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றது. ஜாமீன் கோரியும், தண்டனை ரத்து கோரியும் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து, கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை உத்தரவிட்ட நிலையில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் அவசர மனு ஒன்றை அளித்தனர். கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அளிக்கப்பட்ட அந்த …

மேலும் படிக்க