முக்கியசெய்திகள்

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி

ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க்கின் கென்னடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, ஜெர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரில் இரவு தங்கினார். பின்னர், வெள்ளிக்கிழமை காலையில் அங்கிருந்து தனது தனி விமானத்தில் புறப்பட்ட அவர், சுமார் 9 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எஃப் …

மேலும் படிக்க

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு. பிற்பகல் 1 மணிக்கு வழங்கப்படும்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு பிற்பகல் 1 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார். இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்து பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார். ஜெயலலிதாவுடன், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனும் உடன் சென்றனர். பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் சொத்து குவிப்பு வழக்கின் …

மேலும் படிக்க

அமெரிக்கா புறப்பட்டார் மோடி

ஐந்து நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி. நியூயார்க் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை டில்லியில் இருந்து புறப்பட்டார். அமெரிக்காவில் நாளை முதல் 30 ஆம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மோடி, நியூயார்க் நகரில் ஐநாசபை கூட்டத்தில் உரையாற்றுகிறார். மேலும் அந்நாட்டு அதிபர் ஒபாமா, உள்பட பல்வேறு தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அமெரிக்காவிற்கு மோடி முதன் …

மேலும் படிக்க

பாஜக-சிவசேனா கூட்டணி நீடிக்குமா? பாஜக அவசர ஆலோசனை

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கட்சிகளிடையேயான கூட்டணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. இன்று நடைபெற இருந்து இரு கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அமித்ஷா இன்று மும்பையில் சிவசேனா தலைவர்களுடன் நடத்துவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. வரும் அக்டோபர் 15 ஆம தேதி மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், விரைவில் தொகுதி பங்கீடு பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று  அமித்ஷா எதிர்பாக்கிறார். ஆனால் சிக்கல் தீரும் …

மேலும் படிக்க

மேக் இன் இந்தியா: இனி சிங்க முகம்!

இறக்குமதியை குறைத்துவிட்டு, இந்தியாவை உற்பத்தி சார்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வையுடன் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை இன்று நாட்டிற்கும் உலகிற்கும் அறிமுகம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த திட்டத்தை பிரபலப்படுத்தவும், அதுகுறித்த விவரங்களை மக்கள் தெரிந்துகொள்ளவும் http://www.makeinindia.com என்ற பிரத்யேக வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வெப்சைட்டில் மொத்தம் 25 துறைகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் சிங்க முகத்தை இனி பார்க்கலாம் என்கிற ரீதியில் ஒவ்வொறு …

மேலும் படிக்க

மங்கள்யான் அனுப்பிய முதல் படம்: இஸ்ரோ வெளியிட்டது

செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இஸ்ரோவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி மிஷனின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ( ISRO’s Mars Orbiter Mission) முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மங்கள்யான் விண்கலம், அதில் பொருத்தப்பட்ட வண்ணப் புகைப்பட கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட 10 செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு புகைப்படங்களை வியாழக்கிழமை காலை அனுப்பியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் முதலில் பிரதமர் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. …

மேலும் படிக்க

“மேக் இன் இந்தியா” திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். ‘மேக் இன் இந்தியா’ பிரச்சாரத்தின் துவக்க விழாவில், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை துவக்கி வைத்த வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் தொழில் தொடங்க உரிமங்கள் வழங்குவதை எளிதாக்குவதன் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அரசு …

மேலும் படிக்க

மங்கள்யான் வெற்றி : தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் இன்று வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை உலகம் முழுவதில் இருந்தும் பலர் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செயதியில் கூறியிருப்பதாவது: நமது விஞ்ஞானிகள் மங்கள்யான் விண்கலத்தை இன்று(24,09,2014) செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளனர். இது இந்தியா மற்றும் இஸ்ரோவின் (ISRO) வரலாற்று சிறப்பு மிக்க சாதனையாகும். இந்த சாதனையை நிகழ்த்திய அனைத்து …

மேலும் படிக்க

மங்கள்யான் வெற்றி இந்தியர்கள் கொண்டாட வேண்டிய தருணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

இஸ்ரோ விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது இந்திய அணி கிரிக்கெட்டில் பெறும் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது என்று பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசினார். இஸ்ரோ சென்று விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்திய பிரதமர், அப்போது மங்கள்யான் திட்டம் வெற்றி பெற்ற அந்த மகிழ்ச்சியான தருணத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசினார். அப்போது,  இந்திய அணி …

மேலும் படிக்க

தமிழகத்தில் மின் கட்டணம் உயருகிறது: தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரை

ஆண்டுக்கு சுமார் 6,805 கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான கட்டண விவரங்களை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. 2014-15ம் நிதியாண்டுக்கான மின் கட்டண உயர்வுக்கு, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் தமிழக மின் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கான விவரங்களை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு 6,805 கோடி ரூபாய் அளவுக்கு மின் …

மேலும் படிக்க