முககவசமும்… தலைகவசமும் முக்கியம்…காவல்துறை அதிகாரி அறிவுரை…

கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து கொரோனா பாதிப்பால் பல்வேறு வகையில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு அரசு நிர்வாகம் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கை அமல்படுத்தி வந்தது.

இந் நிலையில் பொது போக்குவரத்துக்கும் அனுமதி, வணிக கடைகள் இயங்கவும் அனுமதி என மக்கள் பயன்பாட்டிற்கு தளர்வுகள் அளித்தது. மேலும் வீட்டை விட்டு வெளியே வரும்போது அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிவது, தனி மனித இடைவெளி கடைபிடித்தல் என அறிவுறுத்தினாலும் இன்றும் மக்களில் பெரும்பாலானோர் அலட்சியமாக செயல்பட்டு வருவதை பார்த்து வருகின்றோம்.

அந்த வகையில் மக்களிடம் இந்த காலக்கட்டத்தில் எந்த அளவுக்கு விழிப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பில், மாதவரம் சரகம் துணை ஆணையாளர் அவர்கள், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் அருகே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே முககவசத்தின் அவசியத்தையும், இரு சக்கர வாகன ஓட்டிகள் முககவசத்துடன் தலைகவசத்தின் அணிவதன் அவசியத்தையும் எடுத்துரைத்தது மட்டுமல்லால் வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பிய பின் கை, கால் கழுவது அல்லது குளித்து விட்டு அன்றாட பணிகளில் ஈடுபடுவதால் தொற்றிலிருந்து நம்மையும் சரி நம் குடும்பத்தினரையும் காத்துக் கொள்ள முடியும் என தன் விழிப்புணர்வு உரை மூலம் எடுத்துரைத்தார். பொதுமக்கள் அனைவரும் சென்னை காவல்துறையின் இச்செயலை மிகவும் பாராட்டினர்.

‌‌செய்தியாக்கம்:
திரு. P.K.மோகனசுந்தரம்
சிறப்பு செய்தியாளர்,
ஜீனியஸ் டீவி

Check Also

PPFA சார்பாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது…

PPFA சார்பாக ஊரடங்கில் தொடர்ந்து மக்கள் பசிப்பிணியினை போக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு …