பாஜகவினர் குதிரை பேரம் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது ஆம் ஆத்மி

டெல்லியில் ஆட்சி அமைப்பதற்காக எம்.எல்.ஏக்களை பாஜகவினர் விலை பேசும் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆம் ஆத்மி.

டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. கவர்னரும்  அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை அழைக்கலாம் என்று ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே பாரதிய ஜனதாவினர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலை பேசும் வீடியோக்களை இன்று ஆம் ஆத்மி அதிரடியாக வெளியிட்டுள்ளது.

ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, தமது ட்விட்டர் பக்கத்தில் தமது கட்சி எம்.எல்.ஏ தினேஷ் மோகானியாவிடம் பாஜகவின் மூத்த தலைவர் சேர்சிங் தாகர் ரூ4 கோடி தருவதாகவும் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேரம் பேசும் வீடியோ ஆதாரம் இருக்கிறது என்றும் வெளியிட்டுள்ளார். 

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *