சென்னை மாநகராட்சி மீன் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பது தொடர்பாக மீன் வளத்துறை அமைச்சர் ஆலோசனை…

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீன் அங்காடி மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா வைரஸ் தோற்று தொடர்பாக மேற்கோள்ளப்பட வேண்டிய தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான மீனவர் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு. டி. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று (06-07-2020) ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆணையாளர் திரு. கோ. பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவ‌ர்க‌ள், மீன்வளத்துறை இயக்குனர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், சென்னை காவல் கூடுதல் ஆணையாளர் திரு. ஆர். தினகரன் இ.கா.ப., அவர்கள், துணை ஆணையாளர் (வருவாய் மற்றும் நிதி) திரு. ஜெ. மேகநாத ரெட்டி இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Check Also

PPFA சார்பாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது…

PPFA சார்பாக ஊரடங்கில் தொடர்ந்து மக்கள் பசிப்பிணியினை போக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு …