உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கோலாகலமாக இன்று ஆரம்பம்!

உலக கோப்பை கால்பந்து போட்டி திருவிழா இன்று பிரேசில் நாட்டின் ரியோடிஜெனிரோ நகரில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று பிரேசில் நாட்டில் தொடங்குகிறது.

32 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியை நடத்த பிரேசில் அரசு ரூ.84,000 கோடி செலவழித்துள்ளது.

இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3,450 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தியுள்ள பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தொடங்கி வைக்கிறார்.

உலகின் பலம் வாய்ந்த 32 அணிகள் களத்தில் மோதிக் கொள்ளவிருக்கும் கண்கொள்ளாக் காட்சியைக் காண உலகம் முழுவதுமுள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

உலகக் கோப்பையின் தொடக்க விழாவில் அமெரிக்க நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ் கலந்து கொள்கிறார். 600-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டு தொடக்க விழாவை பிரம்மாண்டப்படுத்தவுள்ளனர். இந்த நிகழ்ச்சி இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது.

64 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக உலகக் கோப்பை போட்டியை நடத்தும் பிரேசிலின் வீதிகளெல்லாம் விழாக்கோலம் பூண்டிருக்கின்றன. ரியோ டி ஜெனிரோ, பிரேசிலியா, சாவோ பாவ்லோ, ஃபோர்ட்டலீசா, பீலோ ஹரிஸான்டே, சல்வடார், கியூயாபா, போர்ட்டோ அலெக்ரே, ரெசிபே, மனாஸ், நேட்டல், கியூரிட்டிபா ஆகிய 12 நகரங்களில் போட்டி நடைபெறுகிறது.

இன்றைய முதல் போட்டியில் பிரேசில் அணியும், குரோஷியா அணியும் இந்திய நேரடிப்படி இரவு 1.30 மணிக்கு மோதுகின்றன.

கோல் லைன் தொழில்நுட்பம்

இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக கோல் லைன் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஜெர்மனியின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த கருவி மூலம் எல்லை கோட்டை பந்து தாண்டியதா? இல்லையா? என்பதே நடுவர்கள் கண்டறியலாம்.

கோல் கம்பத்தை சுற்றிலும் 14 அதிவேக காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவி பந்து எல்லை கோட்டை கடந்து விட்டால் அடுத்த வினாடியே நடுவர் கையில் கட்டி இருக்கும் கை கடிகாரத்துக்கு தகவல் தெரிந்து விடும். இந்த தொழில்நுட்பம் மூலம் கால் பந்து விளையாட்டில் நீண்ட காலமாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு:

குரூப்-ஏ பிரிவு:  பிரேசில், குரோஷியா, மெக்சிகோ, கேமரூன்

குரூப்-பி பிரிவு: ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா

குரூப்-சி பிரிவு: கிரீஸ், கொலம்பியா, ஐவேரிகோஸ்ட், ஜப்பான்

குரூப்-டி பிரிவு: இத்தாலி, இங்கிலாந்து, உருகுவே, கோஸ் டாரிகா

குரூப்-இ பிரிவு: பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஈக்வடார், ஹோண்டுராஸ்

குரூப்-எப் பிரிவு: அர்ஜென்டினா, போஸ்வனியா ஹெர்சகோவா, நைஜீரியா, ஈரான்

குரூப்-ஜி பிரிவு: ஜெர்மனி, போர்ச்சுக்கல், அமெரிக்கா, கானா

குருப்-எச் பிரிவு: பெர்ஜியம், அல்ஜியா, ரஷ்யா, தென்கொரியா

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *