ஸ்வேதா மார்க்கஸ் அறக்கட்டளை சார்பாக சென்னை மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

சென்னை பரங்கிமலை ஏழுகிணறு தெருவில் ஊரடங்கு உத்தரவினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஸ்வேதா மார்க்கஸ் அறக்கட்டளை சார்பாக நிவாரண உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளர் தங்கராஜ் துவக்கிவைத்தார். இதனையடுத்து அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்வேதா மற்றும் தலைவர் மார்க்கஸ், பொருளாளர் சபரிபிரியன் ஆகியோர் ஏழை எளியமக்களுக்கு அத்தியாவசிய பொருளான 5 கிலோ அரிசி சமூக இடைவெளியோடு வழங்கினர். இந்த சமூக பணியானது மேலும் தொடர்ந்து செயல்படும் எனவும் தெரிவித்தனர்.

Check Also

பசியால் வாடிய மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் உதவி…

சென்னையை புயல் மழையால் பல இடங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. பல இடங்களில் மின்துண்டிப்பு, உணவில்லாமல் மக்கள் தவித்து …