ஜப்பானில் எரிமலை சீற்றம் 30 பேர் பலி

ஜப்பானில் எரிமலை சீற்றம் 30 பேர் பலி

ஜப்பானின் ஆன்டேக் எரிமலையில் சனிக்கிழமை ஏற்பட்ட சீற்றத்தில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், சீற்றம் ஏற்பட்டுள்ள சிகரத்துக்கு அருகில் இதயத்துடிப்பு, முச்சு இல்லாத நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் சுயநினைவின்றிக் கிடந்தனர் என்று தெரிவித்தார். உயிரிழப்பை மருத்துவர்கள் உறுதிப்படுத்தாதவரை, இறந்தவர்களை இவ்வாறு குறிப்பிடுவது ஜப்பானிய அதிகாரிகளின் வழக்கம் ஆகும்.

இதுகுறித்த நாகானோ ஆட்சிப் பகுதி அதிகாரி ஒருவர் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்ட உடல்கள், எங்கு உள்ளன, உயிரிழந்தவர்களின் அடையாளம் ஆகியவை குறித்து உடனடியாகத் தகவல் இல்லை என்றார்.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *