அ.தி.மு.க பொதுச் செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா போட்டியின்றி தேர்வு!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 19.8.2014 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, வேட்பு மனுக்கள் 20.8.2014 முதல் 24.8.2014 வரை தலைமைக் கழகத்தில் பெறப்பட்டது.

அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், முதல்வர் ஜெயலலிதாவுக்காக மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. பெறப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்தும் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப சரியாக அமைந்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர், கட்சியின் அனைத்து அடிப்படைப் பொது உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சியின் சட்ட திட்ட விதி 20, பிரிவு- 2ன்படி, முதல்வர் ஜெயலலிதா, அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக, கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1988 முதல் இதுவரை நடந்த 7 தேர்தல்களில் ஜெயலலிதா போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவை இன்று அ.தி.மு.க.வினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *