பத்திரிகையாளர் படுகொலை… ஜனநாயக காவலர்களின் வாழ்க்கை கேள்விக்குறி?

தாம்பரம், சோமங்கலம் , புதுநல்லூரை சேர்ந்த தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. மோசஸ், கஞ்சா விற்பனை பற்றிய செய்தியை சேகரித்து வெளியிட்டு இருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் நேற்றிரவு அவர் வீட்டிற்கு வந்து தந்திரமாக வெளியே வரவழைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர், இதனால் நிலைகுலைந்த இவரது, அலறலை கேட்டு அவரது தந்தை வெளியே ஓடி வந்தார். இதனால் அந்த மர்ம கும்பல் தப்பியோடியது.

பலத்த காயத்துடன் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மோசஸ் சிகிச்சை பலனில்லாமல் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் வரலாற்றில், அதுவும் இத்தகைய நிகழ்வுகள் இந்திய ஜனநாயக நாட்டில் நான்காவது தூண் என பெருமையுடன் சொல்லிக் கொண்டு உலா வருகின்ற பத்திரிகையாளர்கள் உண்மை செய்திகளை வெளியிட்டமைக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் என்பது இது தானா…? மக்கள் நலனுக்காக இரவு, பகல் பார்மல் உழைத்திடும் செய்தியாளர்கள்/ ஊடகவியாளர்களுக்கே இந்த கொடூரம் நடந்தால் நாட்டு மக்களது நிலை தான் என்ன?

பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற சொல்லுக்கேற்ப பத்திரிகை நண்பர்கள் ஒன்றிணைந்து களத்தில் இறங்கி போராட வேண்டும். பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் பத்திரிகையாளர்களின் நலன் காக்கப்படும்.
‌ தோழர்களே! நாம் ஒன்றிணைவோம். உரிமையினை மீட்போம். ஜனநாயகத்திற்கு வலு சேர்போம்.!

என்றும் உங்களுடன்... " நட்பின் மகுடம்' திரு MJF Ln Dr லி பரமேஸ்வரன்
மாநில தலைவர்,
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்
முதன்மை ஆசிரியர்
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ்
தலைவர், ஜீனியஸ் டீவி
மாநில அமைப்புச் செயலாளர், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்
மாநில செய்தி தொடர்பாளர்,
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக்,மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கம்

Check Also

அன்னையின் நினைவு நாளில்…அன்னதானம்

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி …