குறுகியக் காலக் கடன்(ரெப்போ)க்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : RBI

ரிசர்வ் வங்கியால் பிற வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இன்று ரிசர்வ் வங்கி(RBI) ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில்  நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தில் மாற்றமில்லை என்றும், அது தற்போதிருக்கும் 8% ஆகவே நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரிவர்ஸ் ரெப்போ, சி.ஆர்.ஆர்., எஸ்.எல்.ஆர். போன்றவற்றிலும் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் பொது மக்கள் வாங்கும் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பில்லை.

Check Also

இந்தி தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடி

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎன்7 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *