Tag Archives: அதிமுக

உள்ளாட்சி இடைத்தேர்தல் வெற்றி: அதிமுக அரசின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

உள்ளாட்சி இடைத்தேர்தல் வெற்றி, அதிமுக அரசின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாநகராட்சி மேயர், 4 நகராட்சித் தலைவர்கள், ஒரு பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்ந்தெடுக் கப்பட்டனர். கோவை மாநகராட்சி மேயர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர், நான்கு …

மேலும் படிக்க

அ.தி.மு.க பொதுச் செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா போட்டியின்றி தேர்வு!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 19.8.2014 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, வேட்பு மனுக்கள் 20.8.2014 முதல் 24.8.2014 வரை தலைமைக் கழகத்தில் பெறப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், முதல்வர் ஜெயலலிதாவுக்காக மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. பெறப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்தும் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப சரியாக அமைந்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர், கட்சியின் …

மேலும் படிக்க

வெற்றி பெற்றதாக போஸ்டர் வைத்தது தொடர்பாக அதிமுக வேட்பாளர் மீதும் வழக்கு: தேர்தல் ஆணையர் பிரவீண்குமார்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் இன்று  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தலில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, வெற்றி பெற்றதாகவும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் போஸ்டர் அடித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார். மேலும் காஞ்சிபுரத்தில் 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக போஸ்டர் அடித்த விவகாரத்தில் காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக நேற்று காஞ்சிபுரம் நகர்மன்ற உறுப்பினரும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட …

மேலும் படிக்க

1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி – காஞ்சிபுரத்தில் தேர்தல் முடிவு வரும் முன்பே வெற்றி அறிவிப்பு பேனரால் பரபரப்பு

தேர்தல் முடிவு அறிவிக்கப்படாத நிலையில், காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அதிமுகவினர் வைத்த வாழ்த்து பேனரால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில், வழக்கறுத்தீசுவர் கோயில் அருகே அம்மா அவர்களின் ஆசியுடன் கழக தோழர்கள் கடுமையாக உழைத்து 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று மாபெறும் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் அவர்களை வாழ்த்துகிறோம் என்று பேனர்கள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தமிழகம் …

மேலும் படிக்க