Tag Archives: இந்தியா

இந்திய மக்கள் தொகையில் 79.8% இந்துக்கள்; 14.2% முஸ்லிம்கள்

இந்திய மக்கள் தொகை ஆணையம் வெளியிட்டுள்ள இந்த தகவலின்படி, இந்தியாவில் அதிகபட்சமாக இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 24.6 சதவீதமும் இந்துக்களின் மக்கள்தொகை 16.8 சதவீதமும் வளர்ச்சிகண்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்களின் படி இந்திய மக்கள் தொகையில் 79.8 சதவீதம் பேர் இந்துக்கள். 14.2 சதவீதம் பேர் முஸ்லிம்களாவர். இருந்தபோதும் இந்துக்களின் மக்கள்தொகை முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 0.7 சகவிகிதம் குறைந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை …

மேலும் படிக்க

இந்தியாவின் மக்கள் தொகை 121.09 கோடி

இந்தியாவின் மக்கள் தொகை 121.09 கோடி ஆகும். இதில் இந்துக்கள் 96.63 கோடி( 79.8 %), முஸ்லீம்கள் 17.22 கோடி ( 14.2 %), கிறித்தவர்கள் 2.3 கோடி (2.78 %), சீக்கியர்கள் 2.08 கோடி, ஜென மதத்தினர் – 45 லட்சம், பவுத்தவர்கள் – 84 லட்சம் ஆகும். இந்த புள்ளி விபரங்களை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

மேலும் படிக்க

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாதச் சம்பளதாரர்கள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 80 வயதுக்கு உட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களும், “ரீபண்ட்” கோருபவர்களும் ஆன்லைனில்தான் வருமான வரி …

மேலும் படிக்க

‘அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும்’: அலகாபாத் உயர்நீதிமன்றம்

இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நீதித்துறையின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க சலுகைகள் பெறுவோர் அனைவருமே மாநிலக் கல்வித் துறையால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளிகளில் தான் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை குறித்தும் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கான தகுதிகளை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட விவரங்களையும் விசாரித்து வந்த …

மேலும் படிக்க

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி காலமானார்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 74. சுவாசக் கோளாறு காரணமாக சுவ்ரா முகர்ஜி கடந்த 7-ம் தேதியன்று டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே இதய நோயாளியான அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று (செவ்வாய்கிழமை) காலை 10.50 மணியளவில் இயற்கை எய்தினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் குடியரசுத் …

மேலும் படிக்க

ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி முதலிடம் பிடித்தது

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது. இந்திய அணிக்கு முதலிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. இலங்கை–இந்தியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் வெளியிடப்பட்டு இருக்கும் உலக ஒருநாள் போட்டி தர வரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தொடருக்கு முன்பு …

மேலும் படிக்க

பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு 10 நாள் பயணத்தைத் தொடங்கினார்.

ஜி20 உள்ளிட்ட உச்சி மாநாடுகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி தெற்கு ஆசிய நாடுகளுக்கான தனது 10 நாள் சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கினார். தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்களை சந்திப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப் பயணத்தை இன்று துவங்கினார். பயணத்தின் முதல் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர் டெல்லியிலிருந்து மியான்மருக்கு புறப்பட்டார். அங்கு அவர் தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் …

மேலும் படிக்க

ஐ.நா. பொருளாதார, சமூக அமைப்பில் இந்தியா மீண்டும் தேர்வு

ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக அமைப்பில் இந்தியா அதிக வாக்குகள் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுளளது. ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் மறு தேர்வு பெற்ற ஒரு வாரத்துக்குள் இந்தியாவுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி இதுவாகும். 193 நாடுகள் உள்ள ஐ.நா. சபையில் பொருளாதார, சமூக அமைப்புக்காக புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் 183 வாக்குகளை இந்தியா பெற்றது. இந்த அமைப்புக்கான தேர்தலில், ஆசிய-பசிபிக் நாடுகளில் இதுவரை அதிகளவு வாக்குகள் பெற்ற நாடுகளில் …

மேலும் படிக்க

போலி வாக்காளரை கண்டுபிடிக்க புதிய கணினி தொழில்நுட்பம்: தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலை நூறு சதவீதம் பிழையின்றி தயாரிக்கவும், போலி வாக்காளர்களை கணினி தொழில்நுட்பத்தில் நீக்கவும் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தம் நடந்து வருகிறது. இந்த திருத்தப் பணிகள் நவம்பர் 10-ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், வாக்காளர் திருத்தப் பணிகளில் பல்வேறு பிழைகள் ஏற்படுகின்றன. பெயர், எழுத்து, முகவரி, புகைப்படம், வார்டு என பல வகைகளில் தவறுகள் ஏற்படுகின்றன. …

மேலும் படிக்க

ஆதார் வழங்க தமிழ்நாட்டில் 469 நிரந்தர மையங்கள்

தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்க 469 நிரந்தர மையங்கள் அமைக்கப்படும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்க இணை இயக்குனர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் சென்னையில் ஆதார் அட்டை வழங்க 50 நிரந்தர மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தகவல் தெரிவித்தார். வரும் நவம்பர் 11ம் தேதிக்குள் மாநகராட்சிகள், நகராட்சிகள், வட்ட தலைமையகங்களில் ஆதார் மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிரந்தர மையங்கள் அரசு அலுவல் நாட்களில் காலை …

மேலும் படிக்க