Tag Archives: உலகம்

ஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில், கடந்த 24–ந் தேதி பக்ரீத் பண்டிகையின்போது லட்சக்கணக்கானோர் கூடி, மினா நகரில் சாத்தான் சுவர் மீது கல்வீசினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 750க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், இந்த விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 74 ஆக உயர்ந்துள்ளது. இந்த …

மேலும் படிக்க

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 பேர் காயமடைந்துள்ளனர். குடிமை பாதுகாப்பு அதிகாரிகள் இதனை தெரிவித்தனர். மெக்காவிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள மினாவில் ஹஜ் புனித யாத்திரையில், பக்ரீத் பெருநாளில் சுமார் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்தக் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 220 பேர் பலியானதாகவும், 450 பேர் …

மேலும் படிக்க

நேபாளத்தில் மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் அமல், புதிய சாசனத்திற்கு எதிர்ப்பு: நேபாளத்தில் வன்முறை

நேபாளத்தில் மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் இன்று முதல் அமலுக்கு வந்தது 240 ஆண்டுகளாக, மன்னராட்சி நடைமுறை அமலில் இருந்த நேபாளத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு, மன்னராட்சி அகற்றப்பட்டு, மக்களாட்சி நடந்து வருகிறது. இதையடுத்து, மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அதற்கான ஒப்புதலும் நாடாளுமன்றத்தில் பெறப்பட்டது. கடந்த 13-ந்தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சாசனத்தின் ஒவ்வொரு  பிரிவாக விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கும் நடவடிக்கை தொடங்கியது. …

மேலும் படிக்க

ஜப்பான் பாதுகாப்பு மசோதாவுக்கு சீனா கடும் கண்டனம்

ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் மசோதாவை ஜப்பான் நிறைவேற்றியிருப்பது பிராந்திய ஒற்றுமையைக் குலைக்கும் செயல் என சீனா கருத்து தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டு ராணுவத்தை நாட்டுக்கு வெளியேயும் பயன்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தயாயு மற்றும் செனகாகு தீவுகளுக்கு இருநாடுகளும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் சீனாவின் கிழக்குக் கடல் எல்லையில் அடிக்கடி பதற்றம் ஏற்படும் சூழ்நிலை …

மேலும் படிக்க

உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவ உலகின் அதிசயம்

உலகிலேயே முதல் முறையாக ரஷ்ய கணிப்பொறி விஞ்ஞானிக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை வரும் 2017ம் ஆண்டு டிசம்பரில் நடைபெறவுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்தவர் வலேரி ஸ்பைரிடோ நோவ், இவர் கணிப்பொறி விஞ்ஞானி ஆவார். இவர் வெர்டிங் ஹோப்மான் என்ற மரபணு திசுக்கள் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார். இந்நோய் குறித்து பல மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வந்தார். ஆலோசனைகளின் முடிவில் இவருக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என …

மேலும் படிக்க

சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்

சிரியாவில் இரு வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தற்கோலை தாக்குதல்களில் 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஹசாக் என்ற இடத்தில் உள்ள காஷ்மன் மற்றும் மஹாட்டா ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இரட்டைத் கார் வெடிகுண்டு  தற்கொலை தாக்குதலில் ஒரு பெண் 2 குழந்தைகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவி ஏற்பு

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்பு துறைஅமைச்சராக இருந்த மால்கம் டர்ன்புல் இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். ஆஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் இன்று நடந்த பதவியேற்பு விழாவின் போது கவர்னர்-ஜெனரல் பீட்டர் காஸ்க்ரொவ்  மால்கம் டர்ன்புல்லுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றுக் கொண்ட பின் பேசிய டர்ன்புல் வலிமையான நாட்டை உருவாக்க கூட்டாக சேர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும் என கூறினார்.

மேலும் படிக்க

ஆஃப்கானிஸ்தானில் கைதிகளை விடுதலை செய்த தலிபான் தீவிரவாதிகள்

ஆஃப்கானிஸ்தானில் காஸ்னி சிறையில் காவலர்களைக் கொன்றுவிட்டு சிறையில் இருந்த நூற்றுக்கணக்கான கைதிகளை ராணுவ உடையில் வந்த தலிபான் தீவிரவாதிகள் விடுதலை செய்துள்ளனர். ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள காஸ்னி மாகாணத்தின் முக்கியச் சிறைச்சாலையில் இன்று அதிகாலை தலிபான் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினர். சிறைக்காவலில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த தீவிரவாதிகள், அங்கு அடைக்கப்பட்டிருந்த 352 கைதிகளை தப்பவைத்தனர். இந்த சம்பவத்தில் காவல் துறை அதிகாரிகள் …

மேலும் படிக்க

அமெரிக்காவில் சீக்கியர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் சீக்கியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிகாகோ நகரைச் சேர்ந்தவர் இந்தர்ஜித் சிங் முக்கர். சீக்கியரான இவர் கடந்த செவ்வாய்க்கிழமை, அங்குள்ள கடை ஒன்றை நோக்கி தனது காரில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, அவருடைய காரை வழிமறிக்கும் வகையில் மற்றொரு கார் குறுக்கீடு செய்தது. அவருக்கு வழிவிடுவதற்காக, முக்கர் தனது காரை நிறுத்தினார். அப்போது, குறுக்கீடு செய்த நபர் தனது காரிலிருந்து இறங்கி முக்கரை சரமாரியாகத் …

மேலும் படிக்க

முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: முதலமைச்சர் ஜெயலலிதா

உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் கோடி முதலீடுகள் பெற இலக்காக கொண்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ந்தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள் கலந்துக்கொண்டனர். ஆனால், இலக்கை விட இரண்டு மடங்கு முதலீடு குவிந்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தனது நிறைவு உரையில் குறிப்பிட்டார். …

மேலும் படிக்க