Tag Archives: பிரதமர் மோடி

சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி

மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்றார் பிரதமர் மோடி. சீன அதிபர் இரு நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்தும் மற்றும் நீண்ட நாட்களாக இரு நாடுகளுக்கிடையே நிலவும் எல்லைப் பிரச்சனை குறித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பில் சீன இராணுவத்தின் சமீபத்திய ஊடுறுவல் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த 1996-ல் ஜியாங் ஜீமென் , 2006–ல் ஹூஜிண்டாவோ ஆகியோரை அடுத்து …

மேலும் படிக்க

இந்தி திணிப்பா? மோடிக்கு கருணாநிதி வேண்டுகோள்

தொடர்பு மொழிப் பிரச்சினையில், அவசரப்பட்டு ஈடுபாடு காட்டுவது கால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்திவிடும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார். ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை – சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது” என்ற தலைப்பில் ஒரு ஆங்கில நாளேடு அன்று செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் இந்தி …

மேலும் படிக்க

ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திரமோடி

இந்திய கடற்படையின் மிகப் பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவை, பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். கோவா கடல் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடி விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் போர்க்கப்பலில் வந்திறங்கினார். அவருக்கு, கடற்படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, விக்ரமாதித்யா போர்க் கப்பல் குறித்து பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விவரித்தனர். மிக் 29 போர் விமானத்தில் அமர்ந்த பிரதமர் மோடி, இந்தியக் கடற்படையினரின் வலிமையை …

மேலும் படிக்க

உலக ரத்ததான தினம்: இளைஞர்களுக்கு மோடி வேண்டுகோள்

உலக ரத்ததான தினம் உலக ரத்ததான தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “உலக ரத்ததான தினமான இன்று ரத்ததானம் செய்யும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ரத்ததானம் செய்வது சமூகத்திற்கு செய்யும் சிறந்த சேவை. ரத்ததானத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று நாம் மீண்டும் உறுதிமொழி ஏற்போம். எனது …

மேலும் படிக்க