Tag Archives: விளையாட்டு

ஆசிய கூடைப்பந்து போட்டிகளில் ‘ஹிஜாப்’ சர்ச்சை: கத்தார் அணி விலகல்

தென் கொரியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்த கத்தார் நாட்டுப் பெண்கள் கூடைப்பந்து அணியினர், போட்டிகளின் போது, இஸ்லாமிய முறைப்படி அவர்கள் அணியும் தலை அங்கிகளை அகற்றுமாறு கோரப்பட்டதை அடுத்து போட்டிகளிலிருந்து விலகிவிட்டனர். ஹிஜாபை  அவர்கள் மங்கோலியாவுக்கு எதிராக நடந்த போட்டியின்போது அகற்றுமாறு கோரப்பட்டனர். அவர்கள் அதைச் செய்ய மறுத்ததை அடுத்து, இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தனர். உலகக் கூடைப்பந்து விதிகள் இதுபோன்ற …

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய வீரர் சவுரவ் கோஷல்

ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெள்ளிப் பதக்கம் வென்றார். தென் கொரியாவின் இன்சியான் நகரில் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற, ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றார். அரையிறுதியில் வென்றதன் மூலம் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் …

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டுப் போட்டி: வெண்கலம் வென்றார் அபினவ் பிந்த்ரா

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று தனது தொழில்முறை துப்பாக்கி சுடுதல் போட்டியை நிறைவு செய்த அபினவ் பிந்த்ரா இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் பெற்று தந்துள்ளார். தென்கொரியாவின் இன்சியானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியின் 4-வது நாளில் 10 மீட்டர் ஆண்கள் பிரிவில், அபினவ் பிந்த்ரா தலைமையிலான சஞ்சீவ் ராஜ்புட், ரவிகுமார் ஆகியோர் கொண்ட அணி இந்தியாவுக்கு 6- ஆவது வெண்கல பதக்கம் பெற்று தந்து …

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு : துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா தங்கம், வெண்கலம் வென்றது

தென்கொரியாவின் இன்சியான் நகரில் வெள்ளிக்கிழமை துவங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சூடுதல் ஆடவர் 50 மீட்டர் போட்டியில் இந்தியாவின் ஜீது ராய் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை சுவேதா சௌத்ரி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். தென் கொரியாவின் அதிபர் பார்க் ஜூன் ஹீ முறைப்படி, ஆசியப் போட்டியைத் தொடங்கி வைத்தார். முன்னதாக பிரபல நடிகை லீ யங், ஆசியப் …

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்: கண்கவர் கலை நிகழ்ச்சிகள் வீடியோ

தென் கொரியாவின் இன்சியானில் வெள்ளிக்கிழமை 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ளன. முதல் நாளான வெள்ளிக்கிழமை இரவு தொடக்க விழா நடைபெறவுள்ளது. கிளாஸ்கோவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் வென்ற பதக்கங்களை (64) விட, இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வென்று தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் காமன்வெல்த்தை விட ஆசியப் போட்டிகளில் பதக்கம் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல. சீனா, தென் கொரியா, …

மேலும் படிக்க

அர்ஜுனா விருது : இது நம்ம ஊரு விளையாட்டு அரசியல்

இந்தியாவில் விளையாட்டுத்துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கான தேர்வு தொடர்ந்து சர்ச்சையை எழுப்பும் விஷயமாகவே உள்ளது. இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், குத்துச் சண்டையில் தங்கப் பதக்கம் வென்றிருந்த மனோஜ் குமார் அந்த விருதுக்கு தேர்தெடுக்கப்படாத நிலையில், அவர் நீதிமன்றம் சென்றார். அவருக்கு அந்த விருதை வழங்குமாறு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது இந்திய விளையாட்டு அமைச்சகம் மனோஜ் குமாருக்கு, அர்ஜுனா விருது வழங்கப்படும் என்று …

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் டி20 – போட்டி அட்டவணை

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் டி20 – போட்டி அட்டவணை நாள் –             மோதும் அணிகள் –                             மைதானம் –         நேரம் செப்.17            கொல்கத்தா-சென்னை –       …

மேலும் படிக்க

ஐபிஎல் சூதாட்டம்: முட்கல் குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்பிப்பு

ஐபிஎல் சூதாட்டம் மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் சங்கத் தலைவர் என். ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட 13 பேர் மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் நியமித்திருந்த நீதிபதி முட்கல் தலைமையிலான குழு, தனது விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட உறையில் இன்று உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையை பெற்றுக்கொண்ட நீதிபதி டி.எஸ்.தாகுர் தலைமையிலான அமர்வு, இது தொடர்பிலான விசாரணை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் …

மேலும் படிக்க

2 வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி இப்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கார்டிப்பில் நேற்று நடந்தது. இதில் 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி …

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி தொடருக்கு ரவிசாஸ்திரி இந்திய அணியின் இயக்குனராக நியமனம்

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஒருநாள் தொடருக்கு இந்திய அணியின் இயக்குனராக ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டித்தொடருக்கு பயிற்சியாளர் பிளட்சர் ஓரங்கட்டிவிட்டு இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரியை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஜோடேவிஸ், பீல்டிங் பயிற்சியாளர் டிரெவர் பென்னி ஆகியோருக்கு ஓய்வு அளிப்பதாககூறி நீக்கிய பிசிசிஐ, முன்னாள் வீரர்கள் …

மேலும் படிக்க