Tag Archives: சினிமா

“உற்றான்” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின்( TUJ) மாநிலத் தலைவர் திரு. DSR சுபாஷ் அவர்களின் மகன் ரோஷன் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் ராஜாகஜினி இயக்கத்தில், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் “உற்றான்” திரைப்படம் வெற்றி பெற “ஜீனியஸ் டிவி” மற்றும் “ஜீனியஸ் ரிப்போர்ட்டர்” சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் படிக்க

புது முயற்சி! “பிகில்” பட இசை வெளியீட்டை எல்லோருக்கும் முன்மாதிரியாக கொண்டாடிய விஜய் ரசிகர்கள்….

பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், இன்றைய இளம் ரசிகர்களை அதிக அளவில் கொண்டவரும் அவரது ரசிகர்களால் ” தளபதி” என அன்புடன் அழைக்கப்படும் திரு. விஜய் அவர்கள் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் “பிகில்” திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவை முன்னிட்டு இவரது மக்கள் இயக்கம் வட சென்னை மாவட்டம் சார்பாக தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் வித்தியாசமான முறையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். இராயபுரம் போக்குவரத்து காவல் …

மேலும் படிக்க

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு ஹைதராபாத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில் நடைபெற்றது. தனது சீக்கட்டி ராஜ்யம் தெலுங்கு திரைப்படத்தின் முன்திரையிடல் காட்சியை விஜயவாடாவில் நடத்த அனுமதி கோரியும், அப்படத்தை காண வருமாறு அழைப்பு விடுக்கவும் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தனது அழைப்பை சந்திரபாபு நாயுடு ஏற்றுக் கொண்டதாகவும் கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், …

மேலும் படிக்க

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் சங்கத்தை பிளவுப் படுத்துவதாக அர்த்தம் இல்லை என்றும் விஷால் கூறினார். தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் வரும் 18ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் சேலத்தில் நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் தங்களது பிரசாரத்தை தொடங்கினர். முன்னதாக செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய விஷால், நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சியை …

மேலும் படிக்க

மதுரையில் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்டாரா? சிவகார்த்திகேயன் விளக்கம்

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், ஹன்சிகா ஆகியோர் கலந்துகொண்டார்கள். மதுரைக்கு வருகிறபோது கமலும் சிவகார்த்திகேயனும் ஒரே விமானத்தில் வந்தார்கள். மதுரை விமான நிலையத்திலிருந்து சிவகார்த்திகேயன் வெளியே வந்தபோது கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார்கள். ரஜினிமுருகன் படத்தில் நடித்ததற்காக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கோஷம் எழுப்பியவாறு சிவகார்த்திகேயனை முற்றுகையிட்டதால் பரபரப்பு …

மேலும் படிக்க

கமல் நடிக்கும் “தூங்காவனம்” திரைப்பட டிரெய்லர் வெளியீடு

கமல்ஹாசன் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவர உள்ள தூங்காவனம் திரைபடத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில், கமல்ஹாசன், திரிஷா மற்றும் திரைஉலகினர் பலரும் கலந்துக்கொண்டனர்.

மேலும் படிக்க

விஜய் சேதுபதியின் “மெல்லிசை” சினிமா டீசர்

விஜய் சேதுபதி புதிதாக நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் மெல்லிசை இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்திரி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி போன்ற படங்களில் இவருடன் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. “மெல்லிசை” என்று பெயர் கொண்டாலும் படத்தின் டீசர் த்ரில்லர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.

மேலும் படிக்க

ஈரான் படத்திற்கு இசையமைத்தற்கு பத்வா: ஏ.ஆர். ரஹ்மான் விளக்கம்

ஈரானிய படத்திற்கு இசையமைத்தால் பத்வா வெளியிடப்பட்டதையடுத்து, இது குறித்து அப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்துள்ளார். முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக பத்வா எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். ஈரான் மொழி திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முஹம்மத்: மெசஞ்சர் ஆப் காட்’ என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை …

மேலும் படிக்க

“விசாரணை’ திரைப்படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விருதை வென்றுள்ளது

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள “விசாரணை’ திரைப்படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் பெருமைமிகு விருதை வென்றுள்ளது. வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்படம் ஒன்று, விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் திரைப்படங்கள் பல வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்தாலும், இதுவரை எந்தப் படமும் விருது பெறவில்லை. தனுஷின் “வுண்டர்பார் ஃபிலிம்’ நிறுவனம் …

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன், சரத்குமாரின் மகள் ரேயான் திருமண நிச்சயதார்த்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுனுவிற்கும், சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் ரேயானுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பந்து வீச்சாளரான பெங்களூருவைச் சேர்ந்த அபிமன்யு மிதுன் ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் ரேயான் இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் …

மேலும் படிக்க