Tag Archives: சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால் இங்கு சூரசம்ஹாரம் பிரசித்தி பெற்றது. கடந்த 24-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினமும் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப …

மேலும் படிக்க

பழனியில் கந்தசஷ்டி விழா துவக்கம்: அக்டோபர் 29 ல் சூரசம்ஹாரம்

பழனி மலைக் கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா வெள்ளிக் கிழமை உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து காப்புக்கட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் புதன்கிழமை சூரசம்ஹாரமும், வியாழக்கிழமை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. பழனியில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி முக்கியமான திருவிழாவாகும். முழுக்க முழுக்க மலைக்கோயிலில் நடைபெறும் இவ்விழா இன்று மலைக்கோயிலில் காப்புக்கட்டுடன் துவங்கியது. அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு  பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.  உச்சிக்காலத்தின் போது மூலவர், …

மேலும் படிக்க