Tag Archives: ஜப்பான்

ஜப்பான் பாதுகாப்பு மசோதாவுக்கு சீனா கடும் கண்டனம்

ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் மசோதாவை ஜப்பான் நிறைவேற்றியிருப்பது பிராந்திய ஒற்றுமையைக் குலைக்கும் செயல் என சீனா கருத்து தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டு ராணுவத்தை நாட்டுக்கு வெளியேயும் பயன்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தயாயு மற்றும் செனகாகு தீவுகளுக்கு இருநாடுகளும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் சீனாவின் கிழக்குக் கடல் எல்லையில் அடிக்கடி பதற்றம் ஏற்படும் சூழ்நிலை …

மேலும் படிக்க

ஜப்பானில் எரிமலை சீற்றம் 30 பேர் பலி

ஜப்பானில் எரிமலை சீற்றம் 30 பேர் பலி ஜப்பானின் ஆன்டேக் எரிமலையில் சனிக்கிழமை ஏற்பட்ட சீற்றத்தில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், சீற்றம் ஏற்பட்டுள்ள சிகரத்துக்கு அருகில் இதயத்துடிப்பு, முச்சு இல்லாத நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் சுயநினைவின்றிக் கிடந்தனர் என்று தெரிவித்தார். உயிரிழப்பை மருத்துவர்கள் உறுதிப்படுத்தாதவரை, இறந்தவர்களை இவ்வாறு குறிப்பிடுவது ஜப்பானிய அதிகாரிகளின் வழக்கம் ஆகும். இதுகுறித்த நாகானோ …

மேலும் படிக்க

ஜப்பான் மொழியில் மோடி ட்வீட்

பிரதமர் ஜப்பான் செல்லவிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானிய மொழியில் ட்விட்டரில் தனது கருத்துகளை தனது தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஜப்பானிய மொழியில் மொத்தம் 8 ட்வீட்களை பதிவு செய்துள்ள அவர், அவற்றில் இரண்டில் ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேவையும் டேக் செய்துள்ளார். இது குறித்து ஆங்கிலத்தில் அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில், “ஜப்பானிய நண்பர்கள் பலர் நான் அந்நாட்டு மக்களுடன் ஜப்பானிய மொழியில் நேரடியாக தொடர்பு …

மேலும் படிக்க

உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் ரோபோ ஜப்பானில் அறிமுகம்

மனித உணர்ச்சிகளை அறிந்துகொள்ளும் பெப்பர் என்ற புதிய ரோபோவை ஜப்பானின் சாப்ட் பேங்க் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகில் உள்ள மிகப்பெரிய ரோபோ சந்தையான ஜப்பானில், செயற்கை நுண்ணறிவு அமைப்பும், உணர்ச்சிகளை அறியும் ஒரு புதிய தொழில்நுட்பமும் இந்த புதிய ரோபோவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த ரோபோவினால் ஒருவரின் சைகைகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், குரல் தொனிகள் போன்றவற்றை அறிந்துகொள்ள இயலும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் தொடர்பு …

மேலும் படிக்க