Tag Archives: தமிழக மீனவர்கள்

காசிமேட்டில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அறிவுரை

‌மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள் இனி வரும் நாட்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடவுள்ளனர். கடலுக்கு செல்லும் மீனவர்கள் எந்தந்த வகையில் பாதுகாப்புடன், நோய்த் தொற்று வராத வகையில் பொதுமக்களுக்கும் பாதிப்பு வராத வண்ணம் செயல்பட வேண்டும் என்பதை மீனவ பிரதிநிதிகளுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை வழங்கினார்கள். சமூக …

மேலும் படிக்க

புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

புதுக்கோட்டையைச் சேர்ந்த 16 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். நேற்று நள்ளிரவு யாழ்ப்பாணத்திற்கு, நெடுந்தீவுக்கும் இடையே உள்ள நயினார் தீவு என்ற இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று …

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து: இலங்கை

போதை பொருள் கடத்தியதாகக் கூறி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை எம்.பி. செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார். அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டதன் பேரில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஹெராயின் எனப்படும் போதைப் பொருளை இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கடத்திச் சென்றதாக கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் …

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் மரண தண்டனை விவகாரம்: ராஜபக்சேவுடன் பேசினாரா மோடி?

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள விவகாரம் தொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌சேவுடன் தொலைபேசியில் பேசியதாக பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணிய சாமி தெரிவித்திருக்கும் தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை. மாறாக இது குறித்து இப்போதைக்கு எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று அது சொல்லியிருக்கிறது. இலங்கைக்கு போதைப்பொருள் …

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் தூக்குத் தண்டனை விவகாரம்: ராமநாதபுரம் எம்.எல்.ஏ இலங்கை செல்கிறார்

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்குத்தண்டனையை மேல்முறையீடு செய்வதற்காக ராமநாதபுரம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா இலங்கை செல்வதாக அறிவித்துள்ளார். ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் தங்கச்சிமடம் சமுதாயக்கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மீனவப் பிரநிதிகள் சேசு, பேட்ரிக், சந்தியா, ராயப்பன், அருள், ஜெயசீலன் உள்ளிட்டோர்முன்னிலை வகித்தனர். இதில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பேசியதாவது, ”பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று ஐந்து மாதங்களில் மட்டும் …

மேலும் படிக்க

5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை

தமிழ்நாட்டு மீனவர்கள் 5 பேருக்கு இலங்கையில் தூக்கு  தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஹெராயின் கடத்தியதாக 2011-ல் வழக்கு தொடரப்பட்டது. கடத்தல் வழக்கில் தமிழக மீனவர்கள் 5 பேர், இலங்கை மீனவர்கள் 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மீனவர்கள் 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கொழும்பு நகர நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ராமேஸ்வரத்தில் இருந்து 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ந் தேதி காலை 712 விசைப்படகுகளில் …

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் – ராஜபக்சே உத்தரவு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக அதிபர் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சே, அந்நாட்டு மீன்வளத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சிறைகளில் 98 தமிழக மீனவர்கள் இருப்பதாக, அந்நாட்டு மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. நேற்று, இலங்கைக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமை …

மேலும் படிக்க