Tag Archives: தீவிரவாதி

சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்

சிரியாவில் இரு வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தற்கோலை தாக்குதல்களில் 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஹசாக் என்ற இடத்தில் உள்ள காஷ்மன் மற்றும் மஹாட்டா ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இரட்டைத் கார் வெடிகுண்டு  தற்கொலை தாக்குதலில் ஒரு பெண் 2 குழந்தைகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

ஆஃப்கானிஸ்தானில் கைதிகளை விடுதலை செய்த தலிபான் தீவிரவாதிகள்

ஆஃப்கானிஸ்தானில் காஸ்னி சிறையில் காவலர்களைக் கொன்றுவிட்டு சிறையில் இருந்த நூற்றுக்கணக்கான கைதிகளை ராணுவ உடையில் வந்த தலிபான் தீவிரவாதிகள் விடுதலை செய்துள்ளனர். ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள காஸ்னி மாகாணத்தின் முக்கியச் சிறைச்சாலையில் இன்று அதிகாலை தலிபான் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினர். சிறைக்காவலில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த தீவிரவாதிகள், அங்கு அடைக்கப்பட்டிருந்த 352 கைதிகளை தப்பவைத்தனர். இந்த சம்பவத்தில் காவல் துறை அதிகாரிகள் …

மேலும் படிக்க

ஈராக்கில் பழிக்குப் பழியாக 4 பேரை உயிருடன் எரித்துக் கொன்றனர் ஐஎஸ் தீவிரவாதிகள்

ஈராக்கில் 4 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்து, அதன் வீடியோ காட்சியை ஐஎஸ் தீவிரவாதிகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சியில் 4 பேர் இரும்புச் சங்கிலியால் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில், எரித்துக் கொல்லப்படும் காட்சி இடம் பெற்றுள்ளது. ஈராக் அரசு படையினர் தங்கள் அமைப்பை சேர்ந்த 4 பேரை உயிருடன் எரித்து கொன்றதாகவும், அதற்கு பழிவாங்கவே, தற்போது 4 பேரை எரித்து கொன்றதாகவும் ஐஎஸ் தீவிரவாதிகள் …

மேலும் படிக்க

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ வேண்டும்: சுஷ்மா சுவராஜ்

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர இடம் கிடைக்கும் வகையில் அந்த அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஐ.நா. பொதுசபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோகென்ஸ் லிக்கேடோப்ட்டிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மோகென்ஸ் லிக்கேடோப்ட் தலைநகர் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார். ஐநா பாதுகாப்பு சபையை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்கிற …

மேலும் படிக்க

போக்கோ ஹராம் தீவிரவாதிகள் 10 பேருக்கு மரண தண்டனை

போக்கோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகளுக்கு சாத் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. நைஜீரியா, நைஜர், சாத் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் போக்கோ ஹராம் அமைப்பினர் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை அவர்கள் கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சாத் நாட்டில் கைது செய்யப்பட்ட போக்கோ ஹராம் தீவிரவாதிகள் பத்து பேருக்கு ஜமினா நீதிமன்றம் மரணதண்டனை விதித்து உத்தரவிட்டது. இத்தீர்ப்பு பொதுமக்களிடையே வரவேற்பைப் …

மேலும் படிக்க

போகோ ஹராம் தலைவர் கொல்லப்பட்டார்: நைஜீரிய ராணுவம்

நைஜீரியப் படைகள் நடத்தியத் தாக்குதலில் போகோ ஹராம் தலைவர் என்று கருதக்கூடிய முகமது பஷீர் கொல்லப்பட்டதாக நைஜீரிய ராணுவம் அறிவித்துள்ளது. நைஜீரிய அரசுக்கு கடந்த ஐந்து ஆண்டு காலமாக அச்சுறுத்தலாக இருந்த போகோ ஹராம் அமைப்பின் தலைவர், நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தின் கொடுங்கா எனும் இடத்தில், புதன்கிழமை இரவு போகோ ஹராம் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், அந்த இயக்கத்தின் தலைவரான முகமது பஷீர் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரி …

மேலும் படிக்க

ஈராக்கில் கடத்தப்பட்ட அமெரிக்க பத்திரிக்கையாளரின் தாய் உருக்கமான வேண்டுகோள்

ஈராக்கில் ISIS பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள அமெரிக்க பத்திரிக்கையாளரின் தாய், தனது மகனை விடுவிக்க கோரி  உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அமெரிக்க பத்திரிக்கையாளரை கொன்று விடப் போவதாக பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அந்த அமைப்பின் தலைவருக்கு அந்த அபலைத்தாய் விடுத்துள்ள கோரிக்கையில், இஸ்லாமிய அரசின் தலைவரான உங்களது கையில் எனது மகனின் உயிர் உள்ளது. அவனை, முகமது நபியின் வழித் தோன்றல் கலிபாவான நீங்கள் மன்னித்து உயிர் பிச்சை வழங்க …

மேலும் படிக்க

ஈராக்கில் கடத்தப்பட்ட 46 இந்திய நர்சுகள் விடுதலை – சிறப்பு விமானம் மூலம் நாளை கொச்சி வருகை

உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். பாக்தாத்துக்கு அடுத்து பெரிய நகரங்களான திக்ரித், மொசூல் நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். திக்ரித் நகரில் 46 இந்திய நர்சுகளும், மொசூல் நகரில் 40 இந்திய தொழிலாளர்களும் பணி புரிந்து வந்தனர். அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளனர். 46 இந்திய நர்சுகளில் 6 பேர் நீலகிரி கூடலூரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தூத்துக்குடி. மற்றவர்கள் …

மேலும் படிக்க

சதாம் உசேனை தூக்கிலிட்ட நீதிபதிக்கு மரண தண்டனை விதித்த ISIS தீவிரவாதிகள்

ராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மானுக்கு ISIS தீவிரவாதிகள் மரண தண்டனையை நிறைவேற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈராக்கில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த சதாம் உசேன் ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சிக்கு எதிராக 2003ஆம் ஆண்டு அமெரிக்கா போர் தொடுத்தது. இந்தப் போருக்கு ஷியா முஸ்லிம்கள், குர்து இன மக்கள் ஆதரவு கொடுத்தனர். பின்னர் பதுங்கு குழி …

மேலும் படிக்க