Tag Archives: பிரதமர் மோடி

இந்திய விமானப் படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய விமானப்படையின் 83வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி, தைரியத்துடனும், உறுதியுடனும் நாட்டிற்காக வீரர்கள் உழைத்து வரும், விமானப்படை வீரர்களுக்கு தலை வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் வான்வழியாக நம்மை பாதுகாப்பதுடன், பேரிடர் காலங்களிலும் முன்னின்று செயல்படுவதாக மோடி பெருமை கூறியுள்ளார். I salute our air force personnel on Air Force Day. They have always …

மேலும் படிக்க

சார்க் மாநாடு: நேபாளம் சென்றடைந்தார் பிரதமர் மோடி

சார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் சென்றடைந்தார். பிரதமர் நரேந்திரமோடி தனி விமானம் மூலம் காத்மாண்டு சென்றடைந்தார்.காத்மாண்டு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நேபாளம் தலைநகர் காட்மண்டில், 36 வது சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான், பூடான், இலங்கை, அப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய தலைவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு, நேபாளம் தலைநகர் காட்மாண்டு 26 மற்றும் …

மேலும் படிக்க

பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு 10 நாள் பயணத்தைத் தொடங்கினார்.

ஜி20 உள்ளிட்ட உச்சி மாநாடுகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி தெற்கு ஆசிய நாடுகளுக்கான தனது 10 நாள் சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கினார். தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்களை சந்திப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப் பயணத்தை இன்று துவங்கினார். பயணத்தின் முதல் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர் டெல்லியிலிருந்து மியான்மருக்கு புறப்பட்டார். அங்கு அவர் தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் …

மேலும் படிக்க

நைஜீரியா தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்

நைஜீரியாவில் ஒரு பள்ளியில் நேற்று தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 48 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள கண்டன செய்தியில் இது போன்ற வன்முறை தாக்குதல்கள் கோழைத்தனமான செயல், பலியோனோர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார். தற்கொலை …

மேலும் படிக்க

​மத்திய அமைச்சரவை நாளை மாற்றப்படுகிறது

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனிடையே, புதிதாக இடம்பெறும் அமைச்சர்கள் யார், யார் என்ற தகவல் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக தலைமையிலான கூட்டணி கடந்த மே மாதம் 26–ந் தேதி பதவி ஏற்றது. இந்த அமைச்சரவையில் 23 கேபினட் அமைச்சர்களும், 22 ராஜாங்க அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் சில அமைச்சர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை  பொறுப்பேற்றுள்ளதால், புதிய அமைச்சர்களை நியமிக்க …

மேலும் படிக்க

செய்தியாளர்களுக்கு பாராட்டு: பிரதமர் மோடி

தூய்மை இந்தியா திட்டத்துக்கு சிறப்பான விழிப்புணர்வு கொடுத்துள்ளதாக செய்தியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். தீபாவளிப் பண்டிகையை அடுத்து புது தில்லியில் இன்று செய்தியாளர்களுக்கு தேநீர் விருந்தளித்தார் பிரதமர் மோடி. நிகழ்ச்சியில் பேசிய மோடி, பத்திரிக்கையாளர்களுடன் உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களை நேருக்கு நேர் சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஊடகங்களில் இருந்தும் தாம் நிறைய கற்றுக் கொண்டதாகவும் பத்திரிக்கையாளர் …

மேலும் படிக்க

அமெரிக்கா புறப்பட்டார் மோடி

ஐந்து நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி. நியூயார்க் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை டில்லியில் இருந்து புறப்பட்டார். அமெரிக்காவில் நாளை முதல் 30 ஆம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மோடி, நியூயார்க் நகரில் ஐநாசபை கூட்டத்தில் உரையாற்றுகிறார். மேலும் அந்நாட்டு அதிபர் ஒபாமா, உள்பட பல்வேறு தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அமெரிக்காவிற்கு மோடி முதன் …

மேலும் படிக்க

“மேக் இன் இந்தியா” திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். ‘மேக் இன் இந்தியா’ பிரச்சாரத்தின் துவக்க விழாவில், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை துவக்கி வைத்த வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் தொழில் தொடங்க உரிமங்கள் வழங்குவதை எளிதாக்குவதன் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அரசு …

மேலும் படிக்க

மங்கள்யான் செவ்வாய் கிரகப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது:

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் புதன்கிழமை (செப்.24) காலை 7.30 மணிக்கு செவ்வாய் கிரகத்தை ஒட்டிய சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. கடந்த 2013ல் செப்.,5ல் துவங்கிய 325 நாள் பயணம் நிறைவடைந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்து பல புதிய சாதனைகளையும் அது படைக்கும்.  மங்கள்யானின் வேகத்தை குறைக்கும் திரவ இயந்தி‌ரம் இன்று காலை 7 மணி 41 நிமிடங்களுக்கு …

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்தித்தார் பில்கேட்ஸ்

இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனரும், பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான பில்கேட்ஸ் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். தனது மனைவி மெலிண்டா கேட்சுடன் இந்தியா வந்த பில் கேட்ஸ், பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பில் கேட்ஸ், பிரதமர் மோடி அறிவித்துள்ள கிளீன் இந்தியா திட்டத்தை தான் பாராட்டுவதாகவும், மக்களின் பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கான ஒரு முதல் முயற்சியே …

மேலும் படிக்க