Tag Archives: புற்றுநோய்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா ?

ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பகுதி சிப்காட் வளாகத்தில் அமைந்திருப்பதாக பொய்யான தகவலை மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன், சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த ஆலையின் விரிவாக்கப் பகுதி, ஏற்கெனவே ஆலை செயல்படும் சிப்காட் வளாகத்தில் இல்லை. ஆனால் சிப்காட் வளாகத்தில் இருப்பதாக …

மேலும் படிக்க

கௌரவ மரணத்தால் புற்றுநோய் அரக்கனை கொன்ற பெண்

அமெரிக்காவில் மூளை புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல தனது வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த பெண், நோயால் உயிரிழப்பதை தவிர்த்து, நோயைக் கொல்லும் விதத்தில் கௌரவமான மரணத்தைத் தழுவியுள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரிட்டானி மேனார்ட் என்ற 29 வயது பெண் மூளை புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் உதவாத நிலையில் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். இன்னும் 6 மாத காலமே உயிர்வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில், …

மேலும் படிக்க

கங்கை நதியில் குளித்தால் கேன்சர் ஏற்பட வாய்ப்பு: ஆய்வு தரும் அதிர்ச்சித் தகவல்

கங்கை நதியில் குளிப்பது புனிதமாகக் கருதப்பட்டு வரும் சூழ்நிலையில், ஒரு முறை கங்கை நதியில் குளித்தாலே புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறுகிறது ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம். அந்த ஆய்வு முடிவுகளின் படி, கங்கை நீரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு தாக்கம் இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பமேளா நடந்த போது கங்கை நதியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை …

மேலும் படிக்க