திருவொற்றியூரில் பத்திரிகையாளர்களின் நலனுக்காக கவன ஈர்ப்பு போராட்டம்…

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் மாநில தலைவர் திரு. D.S.R. சுபாஷ் அவர்களின் தலைமையில், வடசென்னை மாவட்டம் தலைவர் திரு. பிரேம்குமார் அவர்களின் முன்னிலையில், 02.10.2020 மாலை 5 மணியளவில், திருவொற்றியூரில் நடைபெற்றது.

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் சார்பாக அரசுக்கு வைத்த கோரிக்கைகள்:

** கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு உடனடியாக குடும்ப நல நிதி வழங்க வேண்டும்.

** இந்தியா முழுவதும் தொடர்ந்து தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைககள் வலுக்கட்டாயமாக செய்தியாளர்களை பணி நீக்கம் செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் கவலைப்படாமல் இருப்பதற்கு கண்டனம்.

** கொரோனா காலக்கட்டத்தில் களத்தில் பணியாற்றி வரும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ரூ. 50 லட்சம் இன்சூரன்ஸ் பாலிசியை மத்திய அரசே அமைத்து தருவது.

** மருத்துவர்கள், துப்புரவு பணியில் ஈடுபட்டு வருபவர்கள், செவலியர்கள் போன்றவர்களுக்கு கொரோனா காலத்தில் பணியாற்றி வரும் ஒளிப்பதிவாளர், புகைப்படக் கலைஞர் மற்றும் செய்தியாளர்களுக்கும் தமிழக அரசு உதவிட வேண்டும். போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் மாநில அமைப்பு செயலாளர் “நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி. பரமேஸ்வரன், வட சென்னை மாவட்டம் பொருளாளர் திரு. I. கேசவன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் சிறப்பாசிரியர் ” கிங் மேக்கர்” திரு. Ln B.செல்வம் மற்றும் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாக்கம்& ஒளிப்பதிவு:
“ஜீனியஸ்” K.சங்கர்

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …