அசைக்க முடியாத அமைச்சராக மீண்டும்…?

இரண்டு முறை சிவகாசியில் போட்டியிட்டு வெற்றிக்கனியினை புரட்சித் தலைவியின் அம்மாவிற்கு சமர்பித்தவர் என்ற முறையில் இப்போது ராஜபாளையத்திலும் தன் வெற்றிக்கனியினை பெற்றிட களம் காண்பதாக பெருமிதமாக சொல்கிறார். “கேடிஆர்” என செல்லப் பெயருடன் தொகுதி மக்களால், அவரது அபரிதமான ஆதரவாளர்களால் தேர்தல் களத்தில் பம்பரமாய் சுழன்று அடிக்கும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. K.T.ராஜேந்திர பாலாஜி அவர்கள்.

இவரை பற்றி (KTR ) ஆஸ்தான விசுவாசியாக வலம் வருகின்ற இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய கழக செயலாளர் திரு. JPR, இரா. பாஸ்கரன் M Com.,B.Ed., DCM., அவர்கள் நம்மிடம் கூறுகையில், “தமிழகத்தில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் புரட்சி வேட்பாளர் தான் KTR என அடித்து சொல்லலாம். இன்னும் சொல்லும் போனால் விருதுநகர் மாவட்டத்தில் அஇஅதிமுக என்றால் இவர் ஒருவரே. இவரின்றி ஒரு அணுவும் அசையாது. ஆக KTR தான் அஇஅதிமுக என்பது நீக்கமற நிறைந்திருக்கும் உண்மை.

இந்த தேர்தலில் அரசியல் சாணக்கியராக சரித்திர சாதனை வெற்றியினை தந்து மீண்டும் அமைச்சாராக இராஜபாளையம் தொகுதி மக்களின் எளிய தொண்டனாக வலம் வருவதற்கு சபதமே ஏற்கின்றோம் என்றார் ” உணர்ச்சி பொங்க.

தற்போதைய சூழலில் திரு இராஜந்திரபாலாஜி அவர்கள் அதிரடியாக, அதே வேளையில் அமைதியாகவும் தன் தேர்தல் களத்தில் தன் தொண்டர்கள் படைசூழ மக்களை சந்தித்து வருகின்றார் என்பதே நிஜம்‌.

செய்தியாக்கம்:
” கிங்மேக்கர்”
Ln B.செல்வம்

Check Also

️டியூஜே வின் தேர்தல் விழிப்புணர்வு…

ஏப்ரல் 6 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதனையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களில் அனல் பறக்கிறது. அவர்களது தேர்தல் …