அணைக்கட்டில் போலீஸ் பயிற்சி பெற்று வந்த பெண் மாயம்!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு போலீஸ் பயிற்சி பெற்று வந்த தர்மபுரி மாவட்டம் கொள்ளை மாரியம்மன் நகர் மணியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் இவரது மனைவி கனிமொழி வயது 26 இவர் தமிழ்நாடு போலீஸ் சேர்வதற்காக வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த

ஊனை பகுதியில் செயல்படும் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி முதல் கனிமொழியை காணவில்லை.

இதுகுறித்து கனிமொழியின் பெற்றோர் அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீசார் பதிவு செய்து காணாமல் போன கனிமொழியை தேடி வருகின்றனர்.

Check Also

அமைச்சர் ஆகுகிறார் சபாநாயகர்?

சபாநாயகர் அப்பாவுவை அமைச்சராக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்? நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற …