அத்திவரதர் தரிசனம் நேரலையில்…

அத்திவரதர் தரிசனம் நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் சார்பில், சிறப்பு செய்தியாளரின் பார்வையில்…

கடைசி நாளான 16. 08.19 மாலை 4 மணியளவில் அவரை பார்த்தே தீர்வது என கங்கணத்துடன் காஞ்சிபுரம் என் இரு சக்கர வாகனத்தில் சென்றேன்.

இன்று பொது வரிசை என்பதால் இந்த கூட்டத்தில் எப்படி செல்வது என யோசித்த வேளையில் முதியோர், ஊனமுற்றோர் செல்லும் மேற்கு கோபுரம் பாதையை அடைந்து நமது ஜீனியஸ் அடையாள அட்டையை காண்பித்த போது நம்மை மேலும் கீழும் பார்த்த காவல்துறை உயர் அதிகாரி (இங்கே காவல் பணியில் காஞ்சிபுரம் மாவட்டத்தை தவிர்த்து மதுரை, இராமநாதபுரம் போன்ற தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகம்) அனுமதி வழங்கியது அபூர்வமே…

ஏனெனில் இங்கு பணியில் இருந்த தென் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் இணக்கமாக பணி செய்யாமல் கடும் இறுக்கத்தில் தான் செயல்பட்டனர்.
ஆனால் இவர்களது குடும்பத்தினர்கள், நண்பர்களுக்கு முக்கியத்துவம் தந்து அத்திவரதர் தரிசனத்தை ஒரு வகையில் சுலபமாக்கினர்.

இந்த பகுதியில் முதியவராக… கைக்குழந்தை வைத்திருப்பவர்களுடன் ஒருவர் மட்டுமே அனுமதி. ஆனால் இத்தகையவர்களோடு நான்கு அல்லது ஐந்து நபர்கள் வரை உள்ளே போக இதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தது காவல்துறை.

அது தவிர இம் மாவட்ட காவல்துறையை சேர்ந்தவர்கள் இவர்களோடு மல்லுக் கட்டியதை நேரில் கண்டோம். காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டதால் மாணவ/மாணவியர்கள் கூட வீட்டில் முடக்கப் பட்ட நிலையில் இதோ மீண்டும் குளத்தில் வீற்றிருக்க அத்திவரதர் செல்வதை கண்டு மகிழ்ச்சியுடன் பெருமூச்சு விட்டோம்.

அடுத்து 2059 வருடம் மீண்டும் அத்திவரதர் எழும் போது நம் சந்ததியினர் இது போன்ற குளறுபடியான நிலையில் இல்லாமல் நிம்மதியான தரிசனம் பெற வழி கிடைக்க அவர் தான் அருள் புரியணும் என்கிற ஆதாங்கம் அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் ஏற்பட்டது தான் நிஜம்.

இரண்டு மணிநேரம் காத்திருந்து தரிசனம் ஒன்று… இரண்டு..மூன்று வினாடிகள் என எண்ணுவதற்குள் கண்டு வந்த நமது சிறப்பு செய்தியாளர் திரு. P.K. மோகனசுந்தரம்.

Check Also

காளியம்மன் திருக்கோயிலில் திருக்கல்யாணம் திருக்கல்யாணம்…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் 1 வது தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காளிமம்மன் திருக்கோயிலில் 96 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன …