அத்திவரதர் வைபவம்! மக்களை தடுமாற வைத்த நிர்வாகம்!

இதோ குளத்திலிருந்து 40 வருடங்களுக்கு பின் எழுந்தருளிய காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் முடிவுக்கு வந்த நிலையில், காஞ்சிக்கு சென்று தரிசிக்க முடியாமல் திரும்ப வைத்த மாவட்ட நிர்வாகத்தின் சீர்கேட்டை வார்த்தைகளால் சொல்லமுடியாது.

ஒரு பக்கம் நாங்கள் மக்களுக்கு சரியான முறையில் வசதிகள் செய்து கொடுத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் அவ்வூரில் வசிக்கும் மக்களை அன்றாட வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் செய்தது, வெளியூர் மக்களை அலைக்கழித்து இந்த வைபவம் எப்ப முடியும் நாங்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்புவோம் என உள்ளூர் மக்களின் பரிதவிப்பு ஒரு பக்கம் எனில் இந்த வைபவத்தினை வைத்து சிலர் ” புல் கல்லா” கட்டிய வகையில் வரதர் கூரையை பிய்த்துக் கொடுத்துள்ளார்.

காவல்துறையினர் சுழன்று பணி செய்தாலும் பெரும்பாலான காவல்துறையினர் (இதில் நல்ல மனம் கொண்ட விரல் விட்டு எண்ணக் கூடிய காவலர்கள் இருந்தாலும்) பொதுமக்களிடம் வரம்பு மீறி பேசியதை நேரில் கண்டோம்.

திருமலைக்கு சென்றவர்கள் கூட பல மணி நேரங்கள் காத்திருந்தாலும் தரிசனம் பார்த்து விட்டு தான் வருவார்கள். அந்த அளவுக்கு அடிப்படை வசதிகள் குறைவில்லாமல் செய்திருப்பதை மறுக்க முடியாது. ஆனால் முடியும் தருவாயில் பல்லாயிரக் கணக்கான பக்தர்களை பல மணி நேரம் காக்க வைத்து, அவர்களை மிகுந்த வேதனையுடன் திரும்ப வைத்த பெருமை நம் தமிழக அரசின் நிர்வாகத் திறனை உலகளவில் வெட்ட வெளிச்சமாக்கி வேதனைக்குரிய வைபவமாக மாற்றி விட்டதற்கு தமிழன் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும்.!

அடுத்த 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் அத்திவரதர் வெளியே வந்து இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கா வண்ணம் காப்பாற்றுவார் என நம்புவோமாக!.

-ஜீனியஸ் டீம்…

Check Also

காளியம்மன் திருக்கோயிலில் திருக்கல்யாணம் திருக்கல்யாணம்…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் 1 வது தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காளிமம்மன் திருக்கோயிலில் 96 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன …