அன்னை சபிதா உதவும் கரங்கள் சார்பாக அன்னதானம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சென்னை மாவட்ட செயலாளரும், அன்னை சபிதா உதவும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனருமான திரு.S. அன்பு (சென்னை துறைமுக பொறுப்பு கழகம்) அவர்களது மறைந்த வாழ்க்கை துணைவியார் A. சபிதா அவர்களது நினைவு நாளையொட்டி, 08.07.2021, வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் ஒய்எம்சிஏ குப்பம், பெரிய பாளையத்தம்மன் கோயில் தெரு, தண்டையார்ப்பேட்டை, சென்னை 81 ல் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக ஆர்.கே. நகர், திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.J.J. எபினேசர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு லி.பரமேஸ்வரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியருமான ” கிங்மேக்கர்” Ln B. செல்வம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு.Ln.L.வேலாயுதம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு.A.M.ரஷீத், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வட சென்னை மாவட்ட (மே) செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு.D. மகேந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.


Check Also

பசியால் வாடிய மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் உதவி…

சென்னையை புயல் மழையால் பல இடங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. பல இடங்களில் மின்துண்டிப்பு, உணவில்லாமல் மக்கள் தவித்து …