அமெரிக்க ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச், 2-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ஃபெடரரை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் கைப்பற்றினார். 2வது செட்டை ஃபெடரர், 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

பின்னர் சிறப்பாக விளையாடி ஜோகோவிச் அடுத்தடுத்த 2 செட்களையும் கைப்பற்றினார். இறுதியில் ஜோகோவிச் 3க்கு ஒன்று என்ற செட்கணக்கில் ஃபெடரரை வீழ்த்தி 2வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை தனதாக்கினார்.