அமைச்சருக்கு கெட்ட பெயரை தேடி தருகிறதா? பெருநகர மாநகராட்சி…?

இராயபுரம் தொகுதிக்குட்பட்ட மண்டலம் 5 ல் உள்ள வார்டு 49, பகுதி 12 அமராஞ்சிபுரம் அம்மா உணவகம் அருகில் மலை போல குவிந்திருக்கும் குப்பைகளால் இங்கே உணவு உண்ண வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.

மலிவு விலையில் தரமான உணவு சாப்பிட வரும் மக்கள் நலனில் மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தை கவனிக்கும் போது மக்களோடு மக்களாய் பழகி வருகின்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக (எந்த வித ஆரவாரமில்லாமல் ) வலம் வந்துக் கொண்டிருப்பவருக்கு கெட்ட பெயரை மக்களிடத்தில் ஏற்படுத்த முயல்கிறதா பெருநகர மாநகராட்சி?

மேலும் இதே இடத்தில் உரிய அனுமதியில்லாமல், பெயர் பலகையும் இல்லாமல் ஐஸ் பேக்டரி செயல்பட்டு வருவதாகவும் இதனால் சுகாதார சீர்கேடு எற்படுவதாகவும் பகுதி வாழ் மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். இது சம்பந்தபட்ட துறைக்கு தெரியுமா என சமூக ஆர்வலர்கள் எழுப்பிடும் கேள்விக்கு பதில் அளிப்பது யார்?…

ஜீனியஸ் டீவி டீம்.-

Check Also

தூய்மை இந்தியாவின் அவலம்…

சென்னை, இராயபுரம் 5 ஆம் மண்டலம் 49 வட்டத்தில், சோமு 4 வது சந்தில் பிள்ளைகளுக்கு கல்வி போதித்த பள்ளி …