அருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி…

நூற்றாண்டை நோக்கி நடைபோடும் தன் ஆலயத்தினை நாடி வரும் பக்தர்களுக்கு தன் சக்தியால் நல்வாழ்வினை தந்து கொண்டிருக்கும் வண்ணையம்பதி, சிவஞானபுரம், ஆண்டியப்ப முதலி 1 வது சந்தில் வீற்றிருக்கும் அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இத் திருக்கோயிலின் சிறப்பு நிகழ்வாக “பத்ரகாளியம்மன் அருள்மகள்” திருமதி கலையரசி அவர்கள், தன்னை நாடி வருகின்ற பக்த கோடிகளின் குறைகளை தீர்த்து வைத்திடும் வகையில் ” அருள் வாக்கு” சொல்வதில் பிரசித்தம் என்பது கூடுதல் சிறப்பாகும்.

விழா ஏற்பாடுகளை, நிர்வாகிகளான ஆலயத்தின் தலைவர் திரு. S.K .பத்மநாபன், செயலாளர் திரு. M. மகேந்திரவர்மன் ஆலய அர்ச்சகர் திரு. N. நேதாஜி ஆலய நிர்வாகத்தின் செயற்குழு உறுப்பினரும், இராயபுரம் பகுதி நாடார் பேரவை தலைவர் திரு. B. செல்வம் ஆகியோர் சிறப்பான வகையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஒளிப்பதிவு: வே. கந்தவேல்
படத்தொகுப்பு: அமுரா
செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

பிஜேபி சார்பில் நலத்திட்ட உதவிகள்…

மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பாரதத்தின் பிரதமராக பதவியேற்று முழுமையாக ஏழு ஆண்டுகள் கடந்து எட்டாம் …