அவரு பினாமி…நாம சுனாமியா விரட்டுவோம்… அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு..‌

தமிழக சட்டமன்றம் 2021 ஏப்ரல் 6 ந் தேதி நடைபெறவுள்ளது. குறைவான பிரச்சார நாட்கள் இருந்தாலும் வேட்பு மனுத் தாக்கல் முடிந்த சூட்டோடு சூடாக வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இராயபுரம் அஇஅதிமுக கூட்டணி வேட்பாளர் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு. D. ஜெயகுமார் மீண்டும் 7-வது முறையாக களத்தில் இறங்கியுள்ளார். கூட்டணி கட்சி தொண்டர்களுடன் இன்று ( 20.03.2021 சனிக்கிழமை) காலை 8 மணிக்கெல்லாம் உற்சாகத்துடன் இராயபுரம் தொகுதி அமைந்துள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து மக்களிடையே வாக்குகளை சேகரித்தார்.

அந்த வகையில், வேலாயுத பாண்டியன் தெருவில் தீவிர வாக்கு வேட்டையின் போது பேசியதாவது, “தன்னை எதிர்த்து நிற்கின்ற திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் திரு. மூர்த்தி அவர்கள் மு.க. அழகிரியின் பினாமி. நீங்க வேணா பாருங்க நாம இவங்களை சுனாமியா நாம வந்து தோற்கடிக்க போகின்றோம்” என சொல்லும் போதே கூடியிருந்தோர் ஆரவாரமாக கைத் தட்டினர்.

இவருடன் அஇஅதிமுக நிர்வாகிகளும், பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் வளர்ச்சி பிரிவு வடசென்னை கிழக்கு மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் திரு. ஆனந்தபாண்டியன், வடசென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் திரு. வன்னியராஜன், ஊடகப்பிரிவு வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ” கிங்மேக்கர்” Ln B. செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

ஒளிப்பதிவு, படங்கள்,செய்தியாக்கம்: “கிங்மேக்கர்” Ln B.செல்வம்

Check Also

எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அதிரடி.. மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு‌.‌..

சென்னை சிந்தாதிரிப்பேட்டை, வெங்கடேச கிராமிணி தெருவில் இயங்கி வந்த டாஸ்மாக் மூலம் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர்‌. இந்நிலையில் …