ஆந்திராவில் வெங்காய லாரி கடத்தல்

ஆந்திராவின் ராவலுபடு பகுதியில் வெங்காயம் ஏற்றி வந்த லாரி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் இருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு ஆந்திராவை நோக்கி லாரி ஒன்று வந்தது. ராவலுபடு என்ற இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கச் சாலையோரம் தூங்கியுள்ளார். அங்கு வந்த மர்ம நபர்கள் வெங்காயத்துடன் நிறுத்தப்பட்டிருந்த லாரியை கடத்திச் சென்றுள்ளனர்.

சிறிது நேரம் கழித்து கண் விழித்த ஓட்டுநர் லாரி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது தொடர்பாக ராவலுபடு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் லாரியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.