ஆளுநரை காப்பாற்ற, பத்திரிகையாளர்களை தாக்குவதா! டியுஜே கடும் கன்டனம்

14 – 02 – 2019

ஆளுநரை காப்பாற்ற பத்திரிகையாளர்களை தாக்கும் காவல்துறைக்கு டி.யூ.ஜே கடும் கண்டனம் ! – டி.எஸ்.ஆர்.சுபாஷ்

ஆளுநர் மாளிகைப் புகழ் பேராசிரியை நிர்மலாதேவியை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் வளாகத்தில் படம் பிடிப்பதற்காக கேமராமேன்கள் காத்திருந்தனர்

விசாரணை முடிந்து நிர்மலாதேவி வெளியே வந்து வாகனத்தில் ஏறும்போது செய்தியாளர்கள் மற்றும் கேமராமேன்களை அடித்து நாலாபுறமும் சிதறி ஓடவைத்தனர் போலீசார்.

இந்த தாக்குதலில் நக்கீரன் நிருபர் சி.என்.ராமகிருஷ்ணனுக்கு கை முறிந்தது. கை கடிகாரம் உடைந்தது. சன் டிவி செய்தியாளர் மணிகண்டனுக்கு கை எலும்பு மூட்டு இறங்கிவிட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புகைப்படக்காரர்களின் கேமரா உடைந்தது.

காவல் ஆய்வாளர் காந்தி மற்றும் காவலர் சின்னத்துறை ஆகியோர் செய்தியாளர்கள் மீது நடத்தியுள்ள தாக்குதலைக் கண்டித்து, இன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், காமராஜர் சிலை அருகே, டி.யூ.ஜே மாநிலப் பொதுச்செயலாளர் ஐயா கு.வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதில் அனைத்து பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

பொதுவாக ஆளும் கட்சியை காப்பாற்ற காவல்துறை முற்படுவது வழக்கம்.

ஆனால் தமிழக காவல்துறை ஆளுநர் மாளிகையை காப்பாற்ற நினைக்கின்றதா ?

நிர்மலாதேவி விவகாரத்தில், காவல்துறை பத்திரிகையாளர்களை கையாளும் முறை இது போன்ற விமர்சனங்களுக்கு வழி வகுக்கின்றது.

தாக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

தாக்கியவர்கள் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இந்த செயலை டி.யூ.ஜே சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.

தோழமையுடன்
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநிலத் தலைவர்
டி.யூ.ஜே
9444111494

Check Also

பத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…

தமிழக பத்திரிகையாளர்களின் வ(வி)ழிக் காட்டியாய் வாழ்ந்து மறைந்தாலும், இன்றும் பத்திரிகையாளர்கள் என்றாலே ஐயா டி.எஸ். ரவீந்திரதாஸ் என ஒவ்வொரு பத்திரிகையாளரும் …