ஆஸ்காரில் காக்கா முட்டை

இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்பட இருக்கும் படங்கள் குறித்த தேர்வு நடந்து வருகிறது. பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான அமோல் பாலேக்கர் தலைமையிலான குழு இதற்கான படங்களை தேர்வு செய்து வருகிறது.

தென் இந்தியாவில் இருந்து பாகுபலி, காக்கா முட்டை ஆகிய படங்களை ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதுபோலவே அமீர்கானின் பிகே, பிரியாங்கா சோப்ரா நடித்த மேரி ஹோம், நீராஜின் மாஸான் உள்பட பல்வேறு மொழிகளில் மொத்தம் 45 இந்திய படங்கள் ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. மேலும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாவிருக்கிறது.

இதில் தமிழில் காக்கா முட்டை படம் மட்டுமே தேர்வு ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் வெளிவரும் முன்பே 2 தேசிய விருதுகள் பெற்றப் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனர் மணிகண்டன் இயக்கிய இப்படம் 2 சிறுவர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக கூறும் படமாக வெளிவந்து வெற்றிப்பெற்றது.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …