இந்தியாவில் இந்தியரை அவமானப்படுத்திய இஸ்ரேல் காப்பி கடை

இமாசலப் பிரதேசம் கசோலில் இந்தியப் பெண் ஒருவர் இஸ்ரேலிய காபி ஷாப் ஒன்றில் உணவு தராமல் நிராகரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இச்செய்தி பரபரப்பாக பரவி வருகின்றது.

கசோலில் அமைந்துள்ள மிகப் பிரபலமான இஸ்ரேலிய காபி ஷாப்பில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த காபி ஷாப் பெரும்பாலும், இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்குத்தான் என்றும், இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அக்கடையினைச் சேர்ந்தவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டீபன் கயே என்கின்ற டெல்லியினைச் சேர்ந்த பிரிட்டிஷ் இசையாளர் தன்னுடைய பேஸ்புக்கில் அங்கு சென்று ஒரு மெனுவினை கொடுத்ததாகவும் ஆனால் அங்கிருந்த ஊழியர் இவருடைய சக தோழி இந்தியர் என்பதால் அவருக்கு பறிமாற மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், கயே வெளிநாட்டவர் என்பதால் அவருக்கு அவருடைய ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குல்லு மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சிக் குழு தங்களது விசாரணையினை துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிகிறது. எழுத்து பூர்வமான புகார் வராவிட்டாலும் இவ்விசாரணையைத் துவங்கியுள்ளதாக குல்லுவின் காவல்துறை அதிகாரி ராகேஷ் கன்வார் தெரிவித்துள்ளார். அந்த காபி ஷாப் அமைந்துள்ள பகுதி சுற்றுலாத் துறைக்கு சொந்தமானது. எனினும், அது வெளிநாட்டவருக்கு மட்டுமே என்றெல்லாம் தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.