இந்தியாவில் உயிர்களைக் காப்பாற்ற பயன்படும் வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் நிறுவனம் தனது வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில்:

“உங்கள் அனைவருக்கு நன்றி. உலகம் முழுவதும் 50 கோடி மக்கள் வாட்ஸ்ஆப் பயனர்களாக உள்ளனர். கடந்த சில மாதங்களாக, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, ரஷியா ஆகிய நாடுகளில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஒரு நாளில் 70 கோடி புகைப்படங்களும் 10 கோடி வீடியோக்களும் பகிரப்படுகின்றன.

மார்ச் மாதம் வரை வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை 45 கோடியாக இருந்தது. இதில் 32 கோடி பயனர்கள் தினமும் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களாக இருந்தனர்.

இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயல்பாடு சிறப்பாக, சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலும் உள்ளது. இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் பலர், உயிர்களைக் காப்பாற்ற வாட்ஸ் அப் மூலம் இ.சி.ஜி. மற்றும் இருதய நோயாளியின் புகைபடங்களை அனுப்புகின்றனர். இதனால் தாமதமின்றி சிகிச்சை அளிக்க முடிகிறது” இவ்வாறு அந்த நிறுவனம் தனது வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Check Also

இயற்கை மருத்துவம்-பிரம்ம தண்டு

இந்த செடி முழுவதும் மருத்துவ குணம் கொண்டது.இலைச்சாற்றை 10மி காலை வெறும் வயிற்றில் 1 மாதம் அருந்தீ வந்தால் சொறி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *