இமாச்சலில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி, 15 க்கும் மேற்பட்டோர் காயம்

இமாச்சல பிரதேசத்தில், 200 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இமாச்சல பிரதேச மாநிலம் ரெகோங் பியோ என்ற இடத்தில் இருந்து ராம்பூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தியா-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் மலை மீது நாத்பா என்ற இடத்தில் அந்த பேருந்து சென்ற போது திடீரென 200 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விழுந்தது.

சட்லெஜ் ஆற்றின் கரையில் வந்து விழுந்ததில், பேருந்தில் பயணம் செய்த 18 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் அங்குள்ள ராம்பூர் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து இமாச்சல பிரதேச முதலமைச்சர் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Check Also

சென்னை, இராயபுரம் லெதர் கம்பெனியில் பயங்கர தீ..

சென்னை இராயபுரம் லோட்டஸ் ராமசாமி தெருவில் தனியார் லெதர் கம்பெனி உள்ளது. அந்த கம்பெனியில் இன்று மதியம் திடீர் என …