இயற்கை தந்த வரம், வெட்டிவேர் முக கவசம்!

மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் உதவியாளர் திரு பொன்ராஜ் அவர்கள் அறிமுகப்படுத்திய ELITE நிறுவனம் ” வெட்டிவேர் முக கவசம்” எனும் புதிய முக கவசத்தை தயாரித்துள்ளது.

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி வட சென்னை பகுதி வாழ் மக்கள் நலனுக்காக PPFA சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இதனை நாடார் பேரவை தலைவரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. A. நாராயணன் அவர்களிடம் PPFA ராயபுரம் பகுதி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பாசிரியருமான ” கிங் மேக்கர்” திரு. B. செல்வம் அவர்கள் வழங்கினார். மாவட்ட தலைவர் திரு. ரவி, மாவட்ட செயலாளர் திரு. சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஒளிப்பதிவு, செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

PPFA திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக முப்பெரும் விழா!…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 31.10.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் முப்பெரும் விழா …