இயற்கை மருத்துவம்-பிரம்ம தண்டு

இந்த செடி முழுவதும் மருத்துவ குணம் கொண்டது.இலைச்சாற்றை 10மி காலை வெறும் வயிற்றில் 1 மாதம் அருந்தீ வந்தால் சொறி, சிரரங்கு , மேகரணம் , குட்டம், ஆகியவை தீரும். இலையை அரைத்து கடி வாயில் வைத்து கட்டினால் தேள் விஷம் இறங்கும்.

 
இலையை அரைத்து பூசி வர சொறி, சிரங்கு , கரப்பான் தீரும், உள்ளங்கை, உள்ளங்கால் விரைவில் ஆறும்.
இதன் பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை தலைக்கு தேய்த்து குளிக்க 40 நாளில் கண் பார்வை மங்கல், கண் சிவத்தல் , எரிச்சல், நீர் வடிதல் ஆகியவை குணமாகும்.இதன் ஒடித்தால் பால் வரும், இந்த பாலை கண்ணில் விட கண் வலி , சதை வளருதல், கண் சிவத்தல், அரிப்பு, கூச்சம், ஆகியவை குணமாகும்.

இதன் விதையை நெருப்பிலிட்டு புகைத்து அப்புகை வாயில் படுமாறு செய்தால் சொத்தைப் பல் புழு விழும், வலி தீரும், செடியை உலர்த்தி பின் எடுத்து சாம்பாலக்கி சலித்து வைத்து இதில் பல் துலக்கினால் பல் ஆட்டம், சொத்தை, சீழ் வடிதல், வீக்கம் ஆகியவை குணமாகும்.

இது ஒரு சிறந்த பல்பொடி

இதன் சாம்பல் பொடி 1கி , மற்றும் தேன் 2கி கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா , இரைப்பு , இருமல், காசம், இரு வேளை 48 நாள் சாப்பிட முற்றிலும் குணமாகும்…..

இதன் வேரை 200மி நீரில் கொதிக்க வைத்து வடித்து குடித்துவந்தால் காச நோய் குணமாகும்.

“மூலததில் பிரமந்தண்டு வடவேரை வணங்கி பூணவே குளிசமாடி புகழ்ச்சியாய் கட்டிவிட தோன்றிதாமே… பேய் ஓடும்” இது பாட்டு.

இதன் வடபக்க வேரை வழிபாடு செய்து எடுத்து தாயத்தில் வைத்துக் கட்ட பேய் ஓடும்……

Check Also

“அதிக நேர வேலை மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது”

ஒருவர் அதிகமான நேரம் வேலை பார்ப்பதற்கும் அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாய்த் …


Notice: Undefined variable: visibility_homepage in /home/kmaafxvc/geniustv.in/wp-content/plugins/kn-mobile-sharebar/kn_mobile_sharebar.php on line 71