இரண்டிலிருந்து ஒன்றாக மாறிய வேட்பாளர்…

    தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் பல கட்சிகள் கூட்டணியில் மிக்ஸாகி களத்தில் குதித்துள்ளன.   அந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தன் பங்கில் ஓவைசி, எஸ்டிபிஐ என கூட்டணியில் சேர்த்து வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கையும் வெளியிட்ட நிலையில் அங்கும் இங்கும் சீட்டுக்கு ஆளாய் பறந்த தேமுதிகவும் கூட்டணியில் இணைந்துள்ளது. அதுவும் தென் மண்டலத்தில் அமமுக, வட மண்டலத்தில் தேமுதிக என டீல் வகையில் பிரித்து தொகுதிகள் பிரித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் இப்போது இருவருக்கும் பொது எதிரி அஇஅதிமுகவாம். இந்நிலையில், ஆர்.கே.நகர், கோவில்பட்டி என இரண்டு தொகுதியில் போட்டியிட பிளான் பண்ணிய தினகரன் கடைசியாக ஆர். கே. நகரில் டோக்கன் கொடுத்து ஜெயித்த பின் அங்குள்ள மக்களை சரிவர கவனிக்காததால் எங்கே நம் மீது கோபமாக இருப்பார்களோ என்பதால் இங்கேயிருந்து கழன்டு கொண்டாராம். அதனால் இங்கே யாரை நிறுத்துவது என மண்டை காய்ந்த நிலையில் தான் ஆர். கே. நகர் வேட்பாளராக டாக்டர் காளிதாஸ் நிறுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே அஇஅதிமுக சார்பில் நிற்கும் ஆர்.எஸ். ராஜேஷ் கடந்த கால கட்டங்களில் மக்களுக்காக பல்வேறு நலத் திட்ட உதவிகளை வாரி வழங்கியுள்ள நிவையில் இங்கே வெற்றியினை தீர்மானக்கப் போவது யார்?
 " ஜீனியஸ்" கே. சங்கர்

Check Also

தர்காவில் கார்த்திகை தீபம்!….

மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கானுார் குளத்தை …