இராஜபாளையம், ஜமீன்நத்தம்பட்டி, அருள்மிகு சிவசுப்பிரமணிய திருக்கோவிலில் தைப்பூசத்திருவிழா.

இராஜபாளையம், ஜமீன்நத்தம்பட்டி, அருள்மிகு சிவசுப்பிரமணிய திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

27.01.2021 புதன்கிழமை இரவு 10 மணியளவில், மேளதாள வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் பால்குடங்களின் அணிவகுப்பில் உற்சவர் சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வந்தனர்‌. தொடர்ந்து, மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

28.01.2021 வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் சிவசுப்பிரமணிய சுவாமிக்கு தீப ஆராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வருகைத் தந்த பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

தைப்பூச திருவிழாவினையொட்டி நடைபெற்ற சிறப்பு பரிசு குலுக்கல் திட்டத்தில் பங்கு பெற்றவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டது. இப் பரிசு குலுக்கலில் சென்னை இராயபுரம், ஆண்டியப்பன் 1 வது தெருவில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோயிலுக்கு (வருகின்ற பிப்ரவரி மாத இறுதியில் மெகா கும்பாஷேகம் நடைபெற உள்ள நிலையில்) “தாம்பாள தட்டும்”, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியருமான ” கிங்மேக்கர்” திரு.Ln.B.செல்வம் M.A., அவர்களுக்கு “சில்வர் டின்னர் செட்” வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திரு.J மரியஜெயபாலன் ( தலைவர்) , திரு.V. பாலசுப்பிரமணியன்( செயலாளர்) திரு.V சீனிராஜ் ( நாட்டாமை) சிறப்பாக செய்திருந்தனர்.

இவ் விழாவினை பற்றி “நாட்டாமை” திரு. V. சீனிராஜ் கூறுகையில், கொரோனா காலக்கட்டத்திலும் இந்த தைப்பூச திருவிழாவிற்கு நம்மை சுற்றியுள்ள கிராம மக்கள் திரளாக வருகைத் தந்து முருக பெருமானின் அருளை பெற்றுள்ளது மகிழ்ச்சியுடன் நிறைவை தந்துள்ளது. இதே வேளையில் நம்ம ஜமீன்நத்தம்பட்டி, “பாரத பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்றம்” இளைஞர்கள் தங்களது ஈடில்லாத உழைப்பினை தந்து சிறப்பித்தமைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

பாரம்பரியமான திருவிழாவினை கண்டு களித்து பங்குக் கொண்ட கிராம மக்களுக்கு மீண்டும் அடுத்த திருவிழாவில் சந்திப்போம் என்கிற மன நிறைவுஞடன் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:
“கிங்மேக்கர்” திரு.Ln. B.செல்வம்