இராயபுரத்தில் பரபரப்பு…

பிராட்வேயிலிருந்து எண்ணூர் நோக்கி இீன்று மாலை 7 மணியளவில் சென்று கொண்டிருந்த தடம் எண் 4 மாநகர பேருந்தில் இராயபுரம் போக்குவரத்து காவல் நிலையம் அருகே சென்றுக் கொண்டிருந்த வேளையில் கூட்ட நெரிசலில், பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து செல்போன் திருடிக் கொண்டு ஓடிய நபரை கண்டு அந்த பெண் அலற, பேருந்து நிறுத்தப்பட்டு இராயபுரம் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு புகார் மனுவை பெற்று துரிதமாக நடைவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நம்மிடம் பேசிய காவல்துறை நண்பர்கள், நம் காவல் நிலையத்தை சேர்ந்தவர் சென்டரல் ரயில் நிலையத்தில் செல்போனை கடந்த வாரம் பறிகொடுத்ததும், அடுத்த சில நாட்களில் இராயபுரம் மேம்பாலம் அருகில் இரவு ரோந்தில் மர்மான முறையில் உலாவிய நபரை மடக்கிய போது அவர் தான் நம்ம காவலரிடம் கைவரிசை காட்டியவர் என அடையாளம் தெரிந்தது.

தொடர்ந்து நம்மிடம் பேசியவர் சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் சர்வசாதாரணமாக செல்போன் திருட்டு நடந்து வருவதாகவும் முடிந்த வரையில் நாமும் அத்தகைய திருடர்களை பிடித்து பாதிக்கப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்து வருவதாகவும் கூறினார்.

இன்றைய சூழலில் பெண்கள் உஷாராக இருப்பது அவசியம். செல்போன் திருடர்கள் பெண்களை குறி வைத்தே செயல்படுகின்றார்கள் என்றும் தெரிவித்தார்.

படமும், தகவலும்…
ஜீனியஸ் டீம்.

Check Also

சென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…

சென்னை, இராயபுரம் உசேன் மேஸ்திரி தெரு, ஃபகீர் சார்பு தெரு, ஷேக் மேஸ்திரி தெரு (HFS STREETS) குடியிருப்போர் நல்வாழ்வு …