இராயபுரத்தில் மாபெரும் பொது மருத்துவ இலவச முகாம்…

இராயபுரம், கல்மண்டபம் போக்குவரத்து காவல் நிலையத்தின் பின்புறமுள்ள மார்க்கெட் சந்தில் சாத்தவராயன் கோயில் வளாகத்தில் உள்ள ” யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” மற்றும் டாக்டர் ஜெயச்சந்திரன் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களின் நலனுக்காக ” மாபெரும் பொது இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் 24.01.2021 ஞாயிற்றுக்கிழமையன்று குலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.

இந் நிகழ்வில் மறைந்த டாக்டர் ஜெயச்சந்திரன் துணைவியார் டாக்டர் வேணி, புதல்வி டாக்டர் சரண்யா தலைமையில் மருத்துவகுழுவானது பொது மருத்துவம், கண், பல், அக்குபஞ்சர், ஈசிஜி, எக்கோ சக்கரை நோய்க்கான சிகிச்சைகளை வருகை புரிந்த பொதுமக்களுக்கு இலவசமாக தந்து அதற்குரிய மருந்துகளை வழங்கினர்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் இரத்த வங்கி குழு மூலம் ஏராளமானோர் இரத்த தானம் அளித்தனர்.


நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் மற்றுமா பலர் கலந்துக் கொள்ள முகாம் ஏற்பாடுகளை யாதூம் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை நிறுவனர் & தலைவர் திரு. பூ. கார்த்திகேயன், டாக்டர் ஜெயச்சந்திரன் அறக்கட்டளை தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.


செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” K.சங்கர்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு:
ராஜ்குமார்

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …