இராயபுரம் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் மனு தாக்கல்..

தமிழக சட்டமன்ற தேர்தல்களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இன்று முகூர்த்த தினம் என்பதால் வேட்பு மனு தாக்கலுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் அதிமுகவின் இராயபுரம் தொகுதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள திரு. டி. ஜெயக்குமார் அவர்கள், பேசின்பாலம், மண்டலம் 5 ல் உள்ள தேர்தல் அலுவலரிடம் முறைப்படி தன் வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.

இந் நிகழ்ச்சியில், கூட்டணி கட்சியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தன் கட்சி தொண்டர்கள் சூழ ஆரவாரத்துடன் வேட்புமனுவினை தாக்கல் செய்தது குறிப்பிடதக்கது.

ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:
“கிங்மேக்கர்” Ln B.செல்வம்

Check Also

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஜமீன் நத்தம்பட்டியில் காமராஜர் அரங்கம் திறப்பு விழா!…

தனக்காக வாழாமல் மக்கள் நலனுக்காவே வாழ்ந்து மறைந்த பாரத பெருந்தலைவர் ஐயா கு. காமராஜர் அவர்களது பெயரில் நம் ஊர்லேயும் …